‘ஆடாம ஜெயிச்சோமடா’ – தொடரை இழந்தாலும் தரவரிசையில் ஆஸ்திரேலியா முதலிடம்!!

0

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டி20 தொடரை 2-1 க்கு என்கிற கணக்கில் இங்கிலாந்து கைப்பற்றிய போதிலும் ஐசிசி தரவரிசையில் தொடர்ந்து ஆஸ்திரேலியா முதல் இடத்தில் உள்ளது.

ஆஸ்திரேலியா முதலிடம்:

கொரோனா வைரஸ் தொற்றால் பல மாதங்களுக்குப் பிறகு இங்கிலாந்து, ஆஸ்திரேலியா அணிகள் மூன்று ஆட்டங்கள் டி20 தொடரில் விளையாடின. கடந்த ஆண்டு சொந்த மண்ணில் உலகக்கோப்பையை வென்ற பின்னர் இங்கிலாந்து அணி விளையாடும் முதல் சர்வதேச போட்டி இதுவாகும். இதில் 2-1 என்ற கணக்கில் இங்கிலாந்து வெற்றி பெற்ற போதிலும் தரவரிசையில் முதல் இடத்தை பெற முடியவில்லை.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

நேற்று நடைபெற்ற போட்டியில் முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி 145-6 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக பைஸ்ட்ரோ (55), டென்லி (29) ரன்களும் அடித்தனர். இது தொடரின் மிகக் குறைந்த ஸ்கோராகும், வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் தனது நான்கு ஓவர்களில் 20 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார்.

அடுத்து ஆடிய ஆஸ்திரேலியா அணி 19.3 ஓவர்கள் முடிவில் 146 ரன்கள் அடித்து இலக்கை எட்டியது. கேப்டன் ஆரோன் பிஞ்ச் (39), மார்ஷ் (39), ஸ்டோனிஸ் (26) க்ளென் மேக்ஸ்வெல் (6) மற்றும் ஸ்டீவ் ஸ்மித் (3) ரன்கள் அடித்தனர். இங்கிலாந்து நட்சத்திர பேட்ஸ்மேன் ஜோஸ் பட்லர் மற்றும் வழக்கமான கேப்டன் ஈயோன் மோர்கன் ஆகியோர் இப்போட்டியில் பங்கு பெறவில்லை. ஆஸ்திரேலியா வேகப்பந்து வீச்சாளர் பாட் கம்மின்ஸ் மற்றும் தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னருக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. இதற்கடுத்து இரு அணிகளுக்கும் இடையில் வரும் 11ம் தேதி முதல் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் நடைபெற உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here