தூத்துக்குடி to சென்னைக்கு Unreserved சிறப்பு ரயில் இயக்கம்., தெற்கு ரெயில்வே வெளியிட்ட அறிவிப்பு!!!

0

தமிழகத்தில் நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் வாக்களிப்பதற்காக, சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இருந்து ஏராளமானோர், தங்களது சொந்த ஊர்களுக்கு சென்று இருந்தனர். நேற்று (ஏப்ரல் 19) வாக்குப்பதிவு முடிந்த நிலையில், பெரும்பாலானோர் சென்னை உள்ளிட்ட இடங்களுக்கு திரும்ப தயாராகி வருகின்றனர். இவர்களின் வசதிக்கேற்ப, முன்பதிவில்லாத பெட்டியை கொண்ட சிறப்பு ரயில் இயக்க உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

அதன்படி இந்த சிறப்பு ரயில் இன்று (ஏப்ரல் 20) மாலை 04.30 மணிக்கு தூத்துக்குடியில் இருந்து புறப்பட்டு, மறுநாள் (ஏப்ரல் 21) அதிகாலை 04.45 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை சென்றடையும். இந்த ரயில் கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, ஸ்ரீரங்கம், அரியலூர், விருத்தாசலம், விழுப்புரம், திண்டிவனம், மேல்மருவத்தூர், செங்கல்பட்டு, தாம்பரம், சென்னை எக்மோர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

Enewz Tamil WhatsApp Channel 

அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களே., அகவிலைப்படி உயர்வு., மாஸ் அறிவிப்பை வெளியிட்ட ஜம்மு & காஷ்மீர்!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here