Saturday, April 27, 2024

இந்த ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசு – பரிந்துரைக்கப்பட்ட டிரம்ப்!!

Must Read

இந்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு அமெரிக்க குடியரசு தலைவர் டொனால்ட் டிரம்ப்க்கு வழங்க நார்வே அதிகாரிகள் பரிந்துரை செய்துள்ளனர்.

அமைதிக்கான நோபல் பரிசு:

ஒவ்வொரு ஆண்டும் நோபல் பரிசுகள் பலருக்கு வழங்கப்படுகிறது. இயற்பியல், வேதியியல், இலக்கியம், மருத்துவம் அல்லது உடலியங்கியல் மற்றும் அமைதி இந்த துறைகளில் மகத்தான சாதனைகளை புரிந்தவர்களுக்கு நோபல் பரிசுகள் வழங்கப்படுகின்றன. அமைதிக்கான நோபல் பரிசு ஒருவர் உலக நாடுகளுக்கிடையே அமைதியையும் சகோதரத்துவத்தையும் வளர்க்க முயற்சி எடுத்தாரோ அவருக்கு வழங்கப்படும்.

ENEWZ வலைதள பக்கங்களுக்கு கிளிக் செய்யவும்

nobel prize for peace
nobel prize for peace

நோபல் பரிசிற்கு தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு ஒரு பட்டயம், ஒரு பதக்கம் மற்றும் பணம் கொடுக்கப்படும். அமைதிக்கான நோபல் பரிசு மட்டும் சில நிறுவனங்களுக்கு வழங்கப்படுவதும் உண்டு. இந்தியா சார்பில் அன்னை தெரசா கடந்த 1979 ஆம் ஆண்டு பெற்றார்.

பரிந்துரைத்த அதிகாரிகள்:

இந்த பரிசு வேதியியல் ஆராய்ச்சியாளரும் தொழிலதிபருமான ஆல்ஃபிரட் நோபல் என்பவரின் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 10 ஆம் தேதி அன்று நார்வே தலைநகரான ஓசுலோவில் மக்கள் மத்தியில் வழங்கப்படும். இந்த பரிசு நார்வே நாட்டில் வழங்கப்படும். இந்த பரிசிற்கான பரிந்துரை பட்டியலில் தற்போது நார்வே அதிகாரிகள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பெறலாம் என்று பரிந்துரை செய்துள்ளனர்.

தொடரை இழந்தாலும் T20 தரவரிசையில் ஆஸ்திரேலியா முதலிடம்!!

donald trumph
donald trumph

இந்த ஆண்டிற்கான மற்ற துறையில் பெயர்கள் பரிந்துரைக்காத நிலையில் அமைதிக்கான நோபல் பரிசிற்கு மட்டும் பரிந்துரைகள் கொடுக்கப்பட்டுள்ளன.

இவர் பரிந்துரைக்கப்பட்டதன் காரணமாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் இஸ்ரேல் நாடுகளுக்கான இடையே ஆன அமைதி ஒப்பந்தத்தை ஏற்படுத்தியதற்காக என்று கூறப்படுகிறது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

IPL 2024 : சென்னை – ஹைதராபாத் போட்டியில் மழை குறுக்கீடு இல்லை.. வெளியானது வானிலை ரிப்போர்ட்!!

இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் 17வது சீசன் கடந்த மார்ச் 22 ஆம் தேதி முதல்  விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சென்னை சூப்பர்...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -