சூப்பரான மொறுமொறு சிக்கன் – வீட்டுல செஞ்சு அசத்துங்க!!

0
crispy chicken
crispy chicken

அசைவ உணவுகளில் அதிகம் விரும்பப்படுவது சிக்கன் தான்.  ஏனெனில் அதில் அவ்வளவு சுவை இருக்கும். சிக்கனில் நாம் சாப்பிடும் முறைகளை பொருத்தே தீங்கும் ஏற்படும். புதிதாக வாங்கப்பட்ட சிக்கனை சாப்பிடுவது தான் நல்லது. அதனை 2 நாட்கள் வைத்து சாப்பிடுவது போன்றவற்றால் மட்டுமே தீங்கு ஏற்படும். இப்பொழுது சிக்கனை வைத்து சூப்பரான ரெசிபி எப்படி செய்வது என பார்க்கலாம் வாங்க.

தேவையான பொருட்கள்

chicken
chicken

சிக்கன் – 1/2 கி

மஞ்சள்தூள் – 1/2 மஞ்சள்தூள்

மிளகாய்த்தூள் – 1 தேக்கரண்டி

மிளகுத்தூள் – 1/2 தேக்கரண்டி

இஞ்சிபூண்டு விழுது – 1 தேக்கரண்டி

முட்டை – 2

Bread Crumbs

சோளமாவு, மைதா மாவு – 1 தேக்கரண்டி

செய்முறை

முதலில் சிக்கனை மஞ்சள்தூள் சேர்த்து கழுவி எடுத்துக்கொள்ளவும். அதன்பின் அதில் இஞ்சிபூண்டு விழுது, மிளகாய்த்தூள், மிளகுத்தூள், உப்பு சேர்த்து சேர்த்து கலந்து 1 மணிநேரம் பிரிட்ஜில் வைத்துக்கொள்ளவும். அதனபின் மைதா மாவு மற்றும் சோளமாவை கலந்து வைத்துக்கொள்ளவும். அதனபின் அதில் மிளகாய்த்தூள் சேர்த்து கலந்துகொள்ளவும்( தண்ணீர் ஊற்றாமல்). பிறகு முட்டையை மிளகுத்தூள் சேர்த்து கலக்கவும்.

morumoru chicken
morumoru chicken

இப்பொழுது பிரிட்ஜில் இருந்து எடுத்த சிக்கனை மாவில் பிரட்டி பிறகு முட்டையில் நனைத்து எடுத்துக்கொள்ளவும் அதன்பின் Bread Crumbs பிரட்டி எண்ணையில் போட்டு மிதமான சூட்டில் பொரித்து எடுத்தால் மொறுமொறு சிக்கன் தயார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here