யுஜிசி விதிகளின் படியே அரியர் மாணவர்கள் தேர்ச்சி – முதல்வர் திட்டவட்டம்!!

0
Tamilnadu CM
Tamilnadu CM

தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் அரியர் மாணவர்களுக்கு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு தேர்ச்சி வழங்கப்பட்டது யுஜிசி விதிமுறைகளை பின்பற்றியே எடுக்கப்பட்ட முடிவு என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தெரிவித்து உள்ளார். மேலும் இந்த விவகாரத்தில் திட்டமிட்டு வதந்திகள் பரப்பப்பட்டு வருவதாக முதல்வர் கூறியுள்ளார்.

விழுப்புரத்தில் ஆய்வு:

தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் நேரடியாக சென்று ஆய்வு நடத்தி வருகிறார். அந்த வகையில் விழுப்புரத்தில் பணிகளை பார்வையிட்ட முதல்வர் பேசியதாவது, அரசு மேற்கொண்ட நடவடிக்கை காரணமாக விழுப்புரத்தில் கொரோனா உயிரிழப்புகள் குறைந்துள்ளது. தடுப்பணைகள், 28 கோடி ரூபாய் மதிப்பில் நந்தன் கால்வாய் திட்டம், அரசு கலைக்கல்லூரி உள்ளிட்ட திட்டப் பணிகள் குறித்து விவரித்த முதல்வர், அரியர் தேர்ச்சி குறித்தும் பேசினார்.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

நீட் தேர்வு வேண்டாம் என சுப்ரீம் கோர்ட் வரை தமிழக அரசு சென்றுள்ளது. மேலும் அரியர் தேர்வுகள் தேர்ச்சியில் யுஜிசி விதிமுறைகளை பின்பற்றியே தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பான அரசின் நிலைப்பாட்டையும் உயர்கல்வித்துறை அமைச்சர் கேபி அன்பழகன் தெளிவாக கூறிவிட்டார். அரியர் தேர்வுகள் குறித்து திட்டமிட்டு வதந்திகள் பரப்பப்பட்டு வருவதாக முதல்வர் குற்றம் சாட்டினார். கொரோனா தொற்று குறைந்து வருவதால் பள்ளிகள் திறப்பு குறித்து பெற்றோர்களிடம் ஆலோசித்து விரைவில் முடிவு செய்யப்படும் எனவும், 2013ம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மீண்டும் தேர்வெழுதி வெற்றி பெற்று பணிக்கு செல்ல வேண்டும் என முதல்வர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here