அரசியல் கட்சி தொடங்கப்போவதில்லை – நடிகர் ரஜினிகாந்த் திடீர் அறிவிப்பு!!

0
Rajnikanth
Rajnikanth

டிசம்பர் 31ம் தேதி கட்சி தொடங்குவது உறுதி என ஏற்கனவே அறிவித்து இருந்த நடிகர் ரஜினிகாந்த் இன்று வெளியிட்டு உள்ள அறிக்கையில், கட்சி தொடங்கப் போவதில்லை என தெரிவித்து உள்ளார். இதனால் அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தனது உடல்நிலையை கருத்தில் கொண்டு அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

ரஜினிகாந்த் அறிவிப்பு:

அண்ணாத்த பட ஷூட்டிங்காக ஹைதெராபாத் சென்றிருந்த ரஜினிகாந்த், படக்குழுவினருக்கு கொரோனா தொற்று உறுதியான காரணத்தால் சென்னை திரும்ப திட்டமிட்டார். ஆனால் ரத்த அழுத்த மாறுபாடு காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை முடிந்து ஞாயிற்றுக்கிழமை மாலை தனி விமானம் மூலம் சென்னை வீட்டிற்கு திரும்பினார். அவர் கொரோனா தொற்று ஏற்படுத்திக் கொள்ளும் சூழல் மற்றும் உடல்நலனில் அதிக அக்கறை எடுத்துக் கொள்ளுமாறு டாக்டர்கள் அறிவுறுத்தி இருந்தனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் இன்று வெளியிட்டு உள்ள ட்விட்டர் பதிவில், அண்ணாத்த படப்பிடிப்பு தளத்தில் 4 பேருக்கு கொரோனா உறுதியான காரணத்தால் எனக்கும் பரிசோதனை செய்யப்பட்டது. அதன் முடிவில் நெகட்டிவ் என வந்தது. இருப்பினும் ரத்த கொதிப்பு ஏற்றத் தாழ்வு காரணமாக படப்பிடிப்பை நிறுத்தி வைத்தனர். இதனால் பலருக்கும் வேலையிழப்பு, பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது. இது அனைத்திற்கும் என்னுடைய உடல்நிலை தான் காரணம்.

இது ஆண்டவன் எனக்கு கொடுத்த ஒரு எச்சரிக்கையாக நான் பார்க்கிறேன். நான் கட்சி ஆரம்பித்து சமூக ஊடகங்கள் வாயிலாக பிரச்சாரம் செய்து பெரிய வெற்றியை பெற முடியாது. மேலும் 120 பேர் கலந்து கொண்ட படப்பிடிப்பில் கொரோனா பரவி 3 நாள் என்னை மருத்துவமனையில் சிகிச்சை பெற வைத்தது. கட்சி தொடங்கினாள் லட்சக்கணக்கான மக்களை சந்திக்க வேண்டி இருக்கும். தற்போது உருமாறிய கொரோனாவின் 2வது அலை பரவி வருகிறது.

கொரோனா தடுப்பூசி வந்தாலும், நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்கும் மாத்திரைகளை சாப்பிடும் நான் மக்களை சந்தித்து பிரச்சாரம் செய்து உடல்நலனில் பாதிப்பு ஏற்பட்டால் என்னை நம்பி வந்தவர்கள் சிக்கல்களை சந்திக்க நேரிடும். என் உயிர் போனாலும் பரவாயில்லை, அரசியலுக்கு வருவேன் என கூறி தற்போது அரசியலுக்கு வரவில்லை என கூறினால் நாலு பேர் நாலு விதமா பேச தான் செய்வார்கள். ஆனாலும் என்னை நம்பி வந்தவர்களை பலிகடா ஆக்க விரும்பவில்லை.

என்னுடைய மக்கள் மன்றம் தொடர்ந்து செயல்படும். அரசியலுக்கு வராமல் மக்களுக்கு என்ன செய்ய முடியுமோ அதனை மக்கள் மன்றம் மூலமாக செய்வேன் என தெரிவித்து உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here