Monday, May 6, 2024

எஸ்.பி.பி அவர்கள் பூரண குணமடைய இறைவனை பிராத்திக்கிறேன் – ரஜினிகாந்த் உருக்கம்!!

Must Read

பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியன் பூரண குணமடைந்து நலமாக வீடு திரும்ப வேண்டும் என்று ரஜினிகாந்த் வீடியோ வாயிலாக தெரிவித்துள்ளார்.

எஸ்.பி.பிக்கு கொரோனா:

கடந்த 14 ஆம் தேதி திரையுலக பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியன் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார் என்ற செய்தி வெளியானது. இதனால் பலரும் அதிர்ச்சி அடைந்தனர். தொடர்ந்து அவரது உடல் நிலை மோசமாக உள்ளது என்று மருத்துவர் குழுவால் தெரிவிக்கப்பட்டது.

ENEWZ வலைதள பக்கங்களுக்கு கிளிக் செய்யவும்

ilayaraja prays god for spb's wellbeing
ilayaraja prays god for spb’s wellbeing

இதனால், அவரது ரசிகர்கள் கவலை அடைந்தனர். பலரும் அவருக்காக பிராத்தனை செய்வதாக கூறி வந்தனர். அவரது நெருங்கிய நண்பரும், இசையமைப்பாளரும் ஆன இளையராஜா இரு தினங்களுக்கு முன் வீடியோ வாயிலாக, தான் அவரது நலனுக்காக பிராத்தனை செய்வதாக கூறியிருந்தார். அதே போல் தற்போது நடிகர் ரஜினிகாந்த் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

வீடியோ வாயிலாக :

அவர் கூறியதாவது “50 ஆண்டுகளுக்கு மேலாக தனது இனிமையான குரலால் இந்திய மக்களை மயக்கியவர். அவர் பல மொழிகளில் பாடியுள்ளார். அவர் தற்போது தீவிர சிகிச்சையில் இருந்து நலம் பெற்ற செய்தி மகிழ்ச்சியை அளிக்கிறது.

அவர் மீண்டும் நலமாக திரும்பி வர வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை பிராத்தனை செய்கிறேன்.” என்று அந்த வீடியோவில் பதிவிட்டுள்ளார்.

எஸ்.பி.பி உடல்நிலை:

எஸ்.பி.பி உடல் நிலை குறித்து அவரது மகன் எஸ்.பி.சரண் கூறியதாவது “முன்பை விட தற்போது உடல் நிலை நன்றாக உள்ளது. மருத்துவர்களை அடையாளம் காணமுடிகிறது. அவர் முழுமையான மயக்கத்தில் இல்லை. அவருக்கு மூச்சும் சீராக உள்ளது.

ரயில்களுக்கான நிறுத்தங்களை தனியார் நிறுவனமே முடிவு செய்யலாம் – ரயில்வே துறை அறிவிப்பு!!

spb in corona ward
spb in corona ward

அவருக்கு செயற்கை சுவாசம் தான் அளிக்கப்பட்டு வருகிறது என்றாலும் அவரால் இப்போது முன்பை விட நன்றாக மூச்சு விட முடிகிறது. முழுமையாக குணமாக நீண்ட நாட்கள் ஆகும் என்றாலும் நாங்கள் நம்பிக்கையோடு காத்திருக்கிறோம்.” என்று தெரிவித்துள்ளார்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

PF சந்தாதாரர்களுக்கு ஜாக்பாட்., ரூ.50,000 வரையிலும் போனஸ் கிடைக்கும்? EPFO-வின் மாஸ் விதிகள்!!!

அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் ஊழியர்களின் ஓய்வூதிய கால நலன் கருதி, மாதாந்திர ஊதியத்தில் PF தொகை பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு பிடித்தம்...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -