ரயில்களுக்கான நிறுத்தங்களை தனியார் நிறுவனமே முடிவு செய்யலாம் – ரயில்வே துறை அறிவிப்பு!!

0
train
train

கொரோன தாக்கத்தால் ரயில்கள் மற்றும் அனைத்து போக்குவரத்தும் தற்போது நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் புதிய முயற்சியாக இந்தியாவில் ரயில்வே துறையில் தனியார் பங்களிப்பை ஊக்குவிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட்டது. இதில் தனியார் நிறுவனங்கள் ரயில்களை இயக்குவதற்கான வரைவு ஒப்பந்தங்களை ரயில்வே நிறுவனம் வெளியிட்டுள்ளது.

தனியார் நிறுவனங்கள்

இந்தியாவில் 109 வழித்தடங்களில் அதிநவீன தொழில்நுட்பம் கொண்ட 151 பயணிகள் ரயில்களை இயக்க அமைச்சகம் ரயில்வே தனியார் துறைக்குஅழைப்பு விடுத்துள்ளது.

railway
railway

ரயில்வே துறையில் தனியார் பங்களிப்பை ஊக்குவிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், அதில் டிரான்ஸ்போர்ட் இந்தியா, ஆல்ஸ்டோம் டிரான்ஸ்போர்ட், சீமென்ஸ் லிமிடெட், பாம்பார்டியர் உள்ளிட்ட 23 முக்கிய நிறுவனங்கள் கலந்து கொண்டன. மேலும் இந்த ரயில்வே துறையில் தனியார் பங்களிப்பினால் ரூ 30 கோடி வரை முதலீடு கிட்டலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

சில முக்கிய ஒப்பந்தங்கள்

  • தனியார் ரயில்கள் இயக்கப்படும் வழித்தடங்களில் எந்த எந்த நிறுத்தங்களில் ரயில்களை நிறுத்தலாம் என தனியார் நிறுவனங்களே தீர்மானித்து கொள்ளலாம். இதை பற்றிய விபரங்களை முன்கூட்டியே ரயில்நிலையத்தில் தெரிவிக்க வேண்டும்.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

  • மேலும் இதில் ஏதேனும் மாற்றங்கள் செய்ய விரும்பினால் ஒரு வருடத்திற்கு பின்னரே செய்ய முடியும். ஏனென்றால் வருடத்திற்கு ஒரு முறை தான் இதனை திருத்தி அமைக்க முடியும்.

  • ஆதன் பிறகு தனியார் ரயில்களின் நிறுத்தங்கள் அந்த வழித்தடங்களில் செல்லும் விரைவு ரயில்களில் நிறுத்தங்களை விட அதிக எண்ணிக்கையில் இருக்க வேண்டும்.
  • மேலும் எந்த நிலையங்களில் கழிவறைகளில் தண்ணீர் நிரப்ப வேண்டும் என்றும் கழிவறைகளை சுத்தம் செய்ய வேண்டும் என்றும் முன்கூட்டியே அறிவிக்கப்பட வேண்டும்.

  • வெளிப்படையான ஏல நடவடிக்கையின் மூலம் தனியார் ரயிலின் மொத்த வருவாயில் ஒருபங்கு ரயில்வேக்கு கிடைக்க வழி வகுக்கப்படும்.
  • மின்சார கட்டணங்கள் மற்றும் இருப்பு பாதை கட்டணம் வசூலிக்கப்படும். மேலும் பயணிகள் முன்பதிவு செய்ய சிஸ்டத்தை (பிஆர்எஸ்) பயன்படுத்தலாம். ஆனால் இதற்கான கட்டணத்தை ரயில்வே துறைக்கு செலுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here