முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி தொடர்ந்து கவலைக்கிடம் – ராணுவ மருத்துவமனை அறிக்கை!!

0

இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், அவரது மூளையில் இருந்த சிறிய உறைவை அகற்ற அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதன் பிறகு அவரது உடல்நிலை தொடர்ந்து மோசமான நிலையில் உள்ளது. இந்நிலையில் இன்று ராணுவ மருத்துவமனை வெளியிட்டு உள்ள அறிக்கையில் அவரது உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

பிரணாப் முகர்ஜி:

பிரணாப் முகர்ஜியின் நிலைமை தொடர்ந்து மோசமாக உள்ளது மற்றும் உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக புதுடில்லியில் உள்ள இந்திய ராணுவத்தின் ஆராய்ச்சி மற்றும் பரிந்துரை மருத்துவமனை தெரிவித்து உள்ளது. அவருக்கு கொரோனா தொற்றும் உறுதியாகி உள்ள காரணத்தால் தொடர்ந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் வெண்டிலேட்டர் (செயற்கை சுவாசம்) உதவியுடன் சிகிச்சை பெற்று வருகிறார்.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் இணைய கிளிக் பண்ணுங்க!!

அவரது மகன், அபிஜித் முகர்ஜி “கடவுளின் கிருபையுடனும், உங்கள் எல்லாருடைய நல்வாழ்த்துக்களுடனும், அவர் முந்தைய நாட்களை விட மிகச் சிறப்பாக முன்னேறியுள்ளார். உடல்நிலை நிலையாக உள்ளது. அவர் விரைவில் நம்மிடையே திரும்பி வருவார் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம். நன்றி” என்று ட்வீட் செய்துள்ளார்.

சாதாரண கொரோனா வைரஸை விட 10 மடங்கு வேகமாக பரவும் புதிய வைரஸ் – மலேசியாவில் பீதி!!

முகர்ஜியின் உடல் நிலையில் எந்த மாற்றமும் இல்லை என்று மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. அவர் தொடர்ந்து வென்டிலேட்டர் ஆதரவில் இருக்கிறார். பல பழைய இணை நோய்களைக் கொண்ட முன்னாள் ஜனாதிபதியின் உடல்நிலையை நிபுணர்களின் குழு உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது என்று கூறப்பட்டு உள்ளது. பிரணாப் முகர்ஜி 2012 முதல் 2017 வரை இந்தியாவின் 13 வது ஜனாதிபதியாக பணியாற்றினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here