Thursday, May 16, 2024

மதுரையை இரண்டாவது தலைநகராக அறிவிக்க வேண்டும் – செல்லூர் ராஜு கோரிக்கை!!

Must Read

மதுரையை தமிழகத்தின் இரண்டாவது தலைநகராக அறிவிக்க வேண்டும் என்று அமைச்சர் செல்லூர் ராஜு செய்தியாளர்களிடம் பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.

நிருபர்களிடம் பேட்டி:

நேற்று மதுரையில் நிருபர்களை சந்தித்த அமைச்சர் செல்லூர் ராஜு கூறியதாவது “ஒரு மாநிலத்திற்கு இரண்டு தலைநகரங்கள் இருக்கும். அதே போல் தமிழகத்திற்கு மதுரையை இரண்டாவது தலைநகராக அறிவிக்க வேண்டும். மதுரை கலைக்கு பெயர் போன ஊர். அதனால், மதுரையை தான் இரண்டாவது தலைநகரமாக அறிவிக்க வேண்டும்.

ENEWZ வலைதள பக்கங்களுக்கு கிளிக் செய்யவும்

minister sellur raju
minister sellur raju

எம்.ஜி.ஆர். தனது ஆட்சியில் இருந்தபோது, திருச்சியை தான் இரண்டாவது தலைநகரமாக ஆக்க விரும்பினார். ஆனால், அப்போது எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பால் அவரது எண்ணம் நிறைவேறாமல் போனது. தற்போது நாங்கள் மதுரையை இரண்டாவது தலைநகராக்க இந்த கோரிக்கையை வைத்துள்ளோம். (ஏற்கனவே இது குறித்து ஆர்.பி உதயகுமார் நிருபர்களிடம் கூறியிருந்தார்)

கூட்டணி குறித்து விளக்கப்படும்:

மேலும் அவர் “பிஜேபி கைகாட்டும் கட்சி அடுத்த ஆட்சி அமைக்கும் என்பது அந்த கட்சியின் கருத்து. அவர்கள் தங்கள் தொண்டர்களை உற்சாகப்படுத்த இவ்வாறு கூறுகின்றனர். அதை பற்றி எங்களுக்கு கவலை இல்லை. நாங்கள் யாருடன் கூட்டணி அமைப்போம் என்பதை தேர்தல் நெருங்கும் போது தெரிவிப்போம்.

முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி தொடர்ந்து கவலைக்கிடம் – ராணுவ மருத்துவமனை அறிக்கை!!

டாஸ்மாக் விவகாரங்களை முதலமைச்சர் பார்த்து கொள்வார். திரையுலகத்தில் கமல் ஹாசன் சிறந்தவராக இருக்கலாம் ஆனால் அவர் அரசியலில் தேர்ந்தவரில்லை. எங்கள் பாதை தெளிவாக உள்ளது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

ஜி.வி.பிரகாஷ்-சைந்தவி பிரிவது கன்பார்ம் தானா?? அதிர வைக்கும் முக்கிய தகவல்!!

தமிழ் திரையுலகில் இசையமைப்பாளர் மற்றும் நடிகர் என இரண்டிலும் ஜொலித்து வருபவர் தான் ஜிவி பிரகாஷ் குமார். தற்போது இவர் இடிமுழக்கம், 13 போன்ற படங்களில்...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -