நீட் மற்றும் ஜேஇஇ மெயின் 2020 ஒத்திவைப்பு?? உச்சநீதிமன்றம் மறுப்பு!!

0
supreme court
supreme court

கொரோனா பாதிப்பு காரணமாக நீட் மற்றும் ஜேஇஇ மெயின் 2020 தேர்வுகளை காலவரையின்றி ஒத்திவைக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்து உள்ளனர். இதனால் திட்டமிட்டபடி தேர்வுகள் நடைபெறும் என தெரிய வருகிறது.

நீட் மற்றும் ஜேஇஇ மெயின்:

நீட் மற்றும் ஜே.இ.இ தேர்வுகளை 2020 ஒத்திவைக்கக் கோரும் மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்து உள்ளது. நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட பெஞ்ச், கொரோனா பாதிப்பு இருந்த போதிலும் “வாழ்க்கை தொடர வேண்டும்” என்றும், நீதிமன்றம் தலையிடுவதன் மூலம் மாணவர்களின் வாழ்க்கையை ஆபத்தில் ஆழ்த்த முடியாது என்றும் கூறினர்.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

“மாணவர்களின் எதிர்காலம் ஆபத்தில் இருக்க முடியாது. மனுவில் எந்த தகுதியும் இல்லை. இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது மேலும் தேர்வுகளை ஒத்திவைப்பது நாட்டிற்கு ஒரு இழப்பு” என்று நீதிபதிகள் பி.ஆர்.கவாய் மற்றும் கிருஷ்ணா முராரி ஆகியோர் அடங்கிய பெஞ்ச் தெரிவித்துள்ளது.

Exams
Exams

இந்த மாத தொடக்கத்தில், ஜே.இ.இ மற்றும் நீட் 2020 தேர்வுகளை ஒத்திவைக்கக் கோரி 11 மாநிலங்களைச் சேர்ந்த 11 மாணவர்கள் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். செப்டம்பர் மாதம் ஜே.இ.இ மற்றும் நீட் நுழைவுத் தேர்வை நடத்த தேசிய சோதனை முகமை (என்.டி.ஏ) ஜூலை 3ம் தேதி வெளியிட்ட அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும் என்று மனு கோரியது.

முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி தொடர்ந்து கவலைக்கிடம் – ராணுவ மருத்துவமனை அறிக்கை!!

என்.டி.ஏ அறிவித்த பொது அறிவிப்புகளின்படி, ஜே.இ.இ (மெயின்) 2020 தேர்வு செப்டம்பர் 1-6 முதல் நடைபெற உள்ளது, அதே நேரத்தில் நீட்-யுஜி 2020 தேர்வு செப்டம்பர் 13 ஆம் தேதி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த கட்டத்தில் ஜே.இ.இ மற்றும் நீட் நடத்துவதால் லட்சக்கணக்கான மாணவர்களின் உயிர்கள் ஆபத்தில் இருக்கும் என்று 11 மாணவர்கள் தாக்கல் செய்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here