தேர்வு கட்டணம் செலுத்தாததால் அண்ணா பல்கலையில் தேர்வு முடிவுகள் நிறுத்தம் – மாணவர்கள் அதிர்ச்சி..!

0
anna university
anna university

கொரோனா நாடெங்கிலும் பரவி வரும் காரணத்தால் கல்லூரி இறுதியாண்டு தவிர மற்ற தேர்வுகள் யாவும் ரத்து செய்யபட்டுள்ளது. மேலும் இதனை தொடர்ந்து அண்ணா பல்கலை கழகம் வெளியிட்ட தேர்வு முடிவுகளில் கல்லூரி கட்டணம் செலுத்தாததால் சில மாணவர்களுக்கு தேர்வு முடிவுகள் நிறுத்தப்பட்டுள்ளதாக குற்றசாட்டு எழுந்துள்ளது.

அண்ணா பல்கலை கழகம்

தற்போது கொரோனா பரவி வரும் காரணத்தால் கல்லூரி இறுதி ஆண்டு மாணவர்களை தவிர மற்ற மாணவர்களுக்கு தேர்வுகள் யாவும் ரத்து செய்யப்பட்டன. இதன்னை தொடர்ந்து அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகள் மற்றும் சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு தேர்வு முடிவுகல் அறிவிவிக்கப்பட்டது. அதில் கல்லூரி கட்டணம் செலுத்தாத மாணவர்களுக்கு தேர்வு முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

ரயில்களுக்கான நிறுத்தங்களை தனியார் நிறுவனமே முடிவு செய்யலாம் – ரயில்வே துறை அறிவிப்பு!!

anna university
anna university

தேர்வு எண்ணை உள்ளிடும் போது கட்டணம் கட்டத்திற்கான குறியீடே பதிலாக வந்துள்ளது. இதனால் மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் கட்டணம் கடத்திற்காக தேர்வு முடிவுகள் நிர்ருதி வைப்பதை பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும் எழுதாத தேர்விற்கு கட்டணம் வசூலிப்பது எந்த விதத்தில் ஏற்றுக்கொள்வது என பலர் கேள்விகளை எழுப்பியுள்ளனர்.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்த கொரோனா காலகட்டத்தில் கட்டணம் செலுத்த முடியாமல் பல மாணவர்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். கட்டணம் செலுத்த அண்ணா பல்கலைக்கழகம் கட்டாயப்படுத்த கூடாது என பொறியியல் கல்லூரிகளின் கூட்டமைப்பு வற்புறுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here