சரவணன் உதவியால் ரவுடிகளை அடையாளம் காட்டும் சந்தியா – குடும்பத்திற்கு ஏற்படப்போகும் விளைவு என்ன??

0

‘ராஜா ராணி 2’ சீரியலில் ரவுடிகளை அடையாளம் காட்டுவதற்கு சந்தியாவை போலீஸ் ஸ்டேஷன் அழைத்து செல்கிறார் சரவணன். ரவுடிகளை அடையாளம் காட்டிய சந்தியாவை குடும்பத்தினர் எல்லாரும் சேர்ந்து திட்டி தீர்க்கிறார்கள்.

ராஜா ராணி 2

இன்றைய ‘ராஜா ராணி 2’ எபிசோடில் சந்தியாவை போலீஸ் ஸ்டேஷன் கூட்டி கொண்டு வரும் சரவணன் இன்ஸ்பெக்டரிடம் அழைத்து செல்கிறார். இன்ஸ்பெக்டர் கான்ஸ்டபிளை கூப்பிட்டு ரவுடிகளை அழைத்து வர சொல்லுகிறார். ரவுடிகளை கண்டதும் தான் போலீஸ் உடையில் இருப்பது போலவும், அவர்களை அடிப்பது போலவும் நினைத்து கொள்கிறார் சந்தியா.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

பின்பு ரவுடிகளை சரியாக அடையாளம் காட்டும் சந்தியா சரவணன் இருவரும் போன் வரவும், அவசரமாக அங்கிருந்து கடைக்கு கிளம்புகிறார்கள். அங்கு மேள, தாளம், மாலையோடு அங்கிருக்கும் கடைக்காரர்கள் சந்தியாவுக்கு உற்சாகமான வரவேற்பு கொடுக்கிறார்கள்.

இவை அனைத்தையும் வீட்டிலிருந்து பார்த்துக்கொண்டிருக்கிறார்கள் அர்ச்சனாவும், பார்வதியும். பின்பு அனைவருக்கும் சர்க்கரை இனிப்பு வழங்குகிறான். இந்த ஜனங்கள் எல்லாம் சந்தோசமாக இருக்க காரணம் நீங்க தான் என சந்தியாவை ஒரேடியாக பாராட்டுகிறார் சரவணன்.

தமிழக சட்டமன்ற தேர்தல் – போடி தொகுதியில் பன்னீர் செல்வம் வேட்புமனு தாக்கல்!!

அப்போது அங்கு வரும் முஸ்லீம் பாய் கடைக்குள் புகையை கிளப்பிவிட, சினிமாவில் புகைக்குள் வரும் தேவதையை போல நீங்க இருக்கீங்க என சரவணன் கூற ஒரே ரொமான்ஸ் சீன் தான். கடையில் நடந்த எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருந்த அர்ச்சனா சிவகாமியிடம் வந்து வத்தி வைக்கிறார்.

சந்தியா வீட்டுக்கு வந்ததும் ஆளாளுக்கு திட்டி கொட்டுகிறார்கள். அப்போது அங்கு வரும் சரவணன் நான் தான் சந்தியாவை சாட்சி சொல்ல வச்சேன், இத்தன வருசமா அந்த ரவுடிகள் செஞ்ச அநியாயத்தை கேக்க யாரும் இல்ல, இத சந்தியா செஞ்சிருக்காங்க என கூற, சிவகாமி சரவணனை திட்டி விட்டு அங்கிருந்து கிளம்புகிறார்.

இரவு, நடந்தவற்றை பேசிக்கொண்டிருக்கும் சரவணன், உண்மையா இருக்கணும்னு நீங்க நினைக்குறீங்க, உங்க புருஷன் நான், அதுல பாதியாவது உண்மை பேசணும்ல என கூறுகிறார். சந்தியா சரவணனுக்கு நன்றி கூற, சரவணன் நோ மனுஷன் என திருப்பி கூற, சந்தியா விழுந்து விழுந்து சிரிக்கிறார். இத்துடன் இன்றைய ‘ராஜா ராணி 2’ தொடர் முடிவடைகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here