தமிழக சட்டமன்ற தேர்தல் – போடி தொகுதியில் பன்னீர் செல்வம் வேட்புமனு தாக்கல்!!

0
ops

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று துவங்குகிறது. தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் போடி தொகுதியில் இன்று வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

வேட்புமனு தாக்கல்

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று துவங்க உள்ளது. முன்னதாக கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிகளின் இடஒதுக்கீடு நிறைவு பெற்றுள்ளது. அதிமுக மற்றும் திமுக கட்சிகளின் வேட்பாளர் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து இன்று தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் போடி தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார். கடந்த 2001ம் ஆண்டு முதல் முறையாக சட்டப்பேரவை தேர்தலில், பெரியகுளம் தொகுதியில் போட்டியிட ஓ.பன்னீர் செல்வம் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

ops

பெட்ரோல் மற்றும் டீசல் விலை – இன்றைய நிலவரம்!!

அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதா மீது டான்சி வழக்கு நிலுவையில் இருந்ததால், பன்னீர் செல்வம் தமிழக முதல்வராக அறிவிக்கப்பட்டார். அடுத்ததாக 2006ம் ஆண்டு தேர்தலில் பெரியகுளம் தொகுதியில் போட்டியிட்ட அவர் வெற்றி பெற்றார். தொடர்ந்து 2011 மற்றும் 2016ம் ஆண்டு தேர்தலில் போடிநாயக்கனூர் தொகுதியில் போட்டியிட்ட பன்னீர் செல்வம் அங்கும் வெற்றி பெற்றார். மீண்டுமாக 3வது முறையாக போடி தொகுதியில் போட்டியிடும் ஓ.பன்னீர் செல்வம் இன்று மதியம் வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here