குழந்தை விஷயத்தில் அர்ச்சனா மீது சந்தேகப்படும் ஜெசி.., அனைவருக்கும் ஷாக் கொடுத்த சந்தியா.., ராஜா ராணி 2 இன்றைய எபிசோட்!!

0
குழந்தை விஷயத்தில் அர்ச்சனா மீது சந்தேகப்படும் ஜெசி.., அனைவருக்கும் ஷாக் கொடுத்த சந்தியா.., ராஜா ராணி 2 இன்றைய எபிசோட்!!
குழந்தை விஷயத்தில் அர்ச்சனா மீது சந்தேகப்படும் ஜெசி.., அனைவருக்கும் ஷாக் கொடுத்த சந்தியா.., ராஜா ராணி 2 இன்றைய எபிசோட்!!

வியாபாரி சங்க தேர்தல், IPS ட்ரைனிங் என விறுவிறுப்பாக நகர்ந்து கொண்டிருக்கும் ராஜா ராணி 2 இன்றைய எபிசோட்டில் ஜெசியிடம் அர்ச்சனா கையும் களவுமாக மாட்டிக் கொள்கிறார்.

ராஜா ராணி 2:

விஜய் டிவியில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி 2 இன்றைய எபிசோட்டில் சரவணன் கடையில் வேலை பார்த்து கொண்டிருக்கும் போது பரந்தாமன் வந்து ஒழுங்காக சங்க தேர்தலில் இருந்து வாபஸ் வாங்கிட்டு ஓடி விடு என மிரட்டுகிறார். ஆனால் சரவணன் உங்களால் ஒன்னும் பண்ண முடியாது. உங்களால் முடிஞ்சத பாத்துக்கோங்க என பதிலடி கொடுக்கிறார். இந்த பக்கம் சந்தியாவை வழக்கம் போல் உன்னால் எதுவும் செய்ய முடியாது என அப்துல் இழிவாக பேசுகிறார். ஆனால் சந்தியா இதை கொஞ்சம் கூட பொருட்படுத்தாமல் குண்டு எறிதல் போட்டியில் முதலிடம் பிடிக்கிறார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

மறுபுறம் அர்ச்சனா பக்கத்து வீட்டு பெண்ணுடன் தனது குழந்தையை வாங்கி கொஞ்சி கொண்டு பேசிக் கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக குழந்தை வண்டியோடு நகர்ந்து செல்ல, அப்போது பார்த்து எதிரே வந்த பைக் மோத வருகிறது. இதை பார்த்த அர்ச்சனா பதறிப்போய் குழந்தையை தூக்கி காப்பாற்றுகிறார். அவரின் செயலை பார்த்து பக்கத்து வீட்டு பெண் மற்றும் ஜெசி இருவரும் வியப்படைகின்றனர்.

முல்லை அம்மாவை சீண்டி பார்த்த மீனா, ஐஸ்வர்யா.., சரியான ஆப்பு வைத்த பார்வதி.., இன்றைய பாண்டியன் ஸ்டோர்ஸ் எபிசோட்!!

மேலும் அந்தப் பெண் என்னமோ நீ பெத்த புள்ளையாட்டம் பதறுற என கேட்க அர்ச்சனாவுக்கு வேர்த்து போகிறது. இதனால் ஜெசி அர்ச்சனா மீது சந்தேகம் அடைகிறார். மறுபக்கம் சிவகாமி தன்னுடைய கணவருடன் கடைத்தெருவுக்கு சென்ற போது செந்தில், சரவணன் சண்டை போடுவதை ஏளனமாக ஊர் மக்கள் பேசுகின்றனர். இதை தாங்கிக்கொள்ள முடியாத சிவகாமி புலம்புகிறார். இந்த பக்கம் சந்தியா அப்துல் உட்பட எல்லோரும் கபடி போட்டியில் கலந்து கொண்டு விளையாடுகின்றனர். போட்டி விறுவிறுப்பாக அரங்கேற இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here