மெல்ட்வாட்டர் சாம்பியன்ஸ் டூர் 2022: பிரக்ஞானந்தா அதிர்ச்சி தோல்வி…, கார்ல்சன் தொடர்ந்து முதலிடம்!!

0
மெல்ட்வாட்டர் சாம்பியன்ஸ் டூர் 2022: பிரக்ஞானந்தா அதிர்ச்சி தோல்வி..., கார்ல்சன் தொடர்ந்து முதலிடம்!!
மெல்ட்வாட்டர் சாம்பியன்ஸ் டூர் 2022: பிரக்ஞானந்தா அதிர்ச்சி தோல்வி..., கார்ல்சன் தொடர்ந்து முதலிடம்!!

மெல்ட்வாட்டர் சாம்பியன்ஸ் டூரின் 4 வது சுற்றில் இந்தியாவின் அர்ஜுன் எரிகைசியின் அபாரமான ஆட்டத்தின் மூலம் தனது முதல் வெற்றியை பதிவு செய்தார்.

மெல்ட்வாட்டர் சாம்பியன்ஸ் டூர்:

மெல்ட்வாட்டர் சாம்பியன்ஸ் டூரின் பல தொடர்கள் முடிவில், இந்தியாவின் பிரக்ஞானந்தா மற்றும் அர்ஜுன் எரிகைசி டாப் 8 வீரர்கள் கொண்ட பட்டியலில் இணைந்தனர். இதில், உலகின் நம்பர் 1 வீரரான மேக்னஸ் கார்ல்சன், குவாங் லீம் லீ, ஜான்-கிறிஸ்டாஃப் டூடா உள்ளிட்ட வீரர்களும் உள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்த மெல்ட்வாட்டர் சாம்பியன்ஸ் டூரின் இறுதி சுற்று போட்டிகள் கடந்த 14ம் தேதி முதல் நடைபெற்று வருகின்றன. இதில், 4 சுற்றில் இந்தியாவின் அர்ஜுன் எரிகைசி, ஷக்ரியார் மமேதியரோவை எதிர்கொண்டார். இந்த போட்டியில், ஆரம்ப முதல் வேகம் காட்டிய எரிகைசி 3-1 என்ற கணக்கில் மமேதியரோவை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்தார்.

புஜாராவை வைத்து பிசிசிஐ போட்ட மாஸ்டர் பிளான்…, பங்களாதேஷ் தொடருக்கு முன் செயல்படுத்த திட்டமா??

இந்த சுற்றில், பிரக்ஞானந்தா, அமெரிக்காவின் ஜிஎம் வெஸ்லி சோவை எதிர்த்துப் போட்டியிட்டார். இதில், பிரக்ஞானந்தா 1-2 என்ற கணக்கில் அமெரிக்க வீரரிடம் தோல்வியை தழுவினார். இவரை தொடர்ந்து, GM அனிஷ் கிரியை, கார்ல்சன் 3-0 என்ற வீழ்த்தினார். இதன் மூலம், டாப் 8ல் கார்ல்சன் 12 புள்ளிகளுடன் முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டார். இந்த பட்டியலில் பிரக்ஞானந்தா(4) மற்றும் எரிகைசி(3) , 6வது மற்றும் 7 வது இடத்தில் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here