புஜாராவை வைத்து பிசிசிஐ போட்ட மாஸ்டர் பிளான்…, பங்களாதேஷ் தொடருக்கு முன் செயல்படுத்த திட்டமா??

0
புஜாராவை வைத்து பிசிசிஐ போட்ட மாஸ்டர் பிளான்..., பங்களாதேஷ் தொடருக்கு முன் செயல்படுத்த திட்டமா??
புஜாராவை வைத்து பிசிசிஐ போட்ட மாஸ்டர் பிளான்..., பங்களாதேஷ் தொடருக்கு முன் செயல்படுத்த திட்டமா??

இந்திய அணி அடுத்த மாதம் பங்களாதேஷிற்கு எதிராக டெஸ்ட் தொடர்களை விளையாட இருக்கிறது. இதற்கு முன் பிசிசிஐயானது இந்திய A அணியை வைத்து மாஸ்டர் பிளான் ஒன்றை போட்டுள்ளது.

டெஸ்ட் சாம்பியன்ஷிப்:

டி20 மற்றும் ஒருநாள் உலக கோப்பை தொடர்ந்து, டெஸ்ட் சாம்பியன்ஷிப் அடுத்த வருடம் நடைபெற இருக்கிறது. இந்த தொடரானது, ஒரே கட்டமாக நடத்தபடாமல், 2021-2023 என குறிப்பிட்ட காலத்தில், சீரான இடைவெளியில் 9 அணிகளுக்கு இடையே தொடர்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் முடிவில், அதிக புள்ளிகளுடன் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டியில் மோதும்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதன் அடிப்படையில், கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் தொடங்கிய இந்த தொடர், 2023 ல் மார்ச் மாதம் முடிவடைய உள்ளது. இதுவரை நடத்த டெஸ்ட் தொடர்களின் மூலம், ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்கா முதல் இரு இடத்தில் உள்ளனர். இவர்களுக்கு அடுத்ததாக இலங்கை, இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் உள்ளன. இதில், இந்தியா முதல் இரு இடங்களுக்கு முன்னேற வேண்டுமானால், இனி வரும் பங்களாதேஷ் மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர்களை அதிக ரன் ரேட்டுடன் கைப்பற்ற வேண்டும்.

ITTF 2022: அதிரடியான ஆட்டத்தால் காலிறுதிக்கு முன்னேறிய மனிகா பத்ரா…, அரையிறுதி முனைப்பில் இன்று பலப்பரீட்சை!!

இதில், பங்களாதேஷிற்கு எதிராக சர்வதேச இந்திய அணி அடுத்த மாதம் 2 டெஸ்ட் தொடர்களில் மோத இருக்கிறது. இதற்கு முன், பங்களாதேஷுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்திய A அணி, பங்களாதேஷ் A அணிக்கு எதிராக மோத உள்ளது. இதற்கான இந்திய A அணியை டெஸ்ட் தொடர் நாயகன் புஜாரா வழி நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர், இந்தியாவின் மெயின் அணியிலும் உள்ளார் என்பதால், பங்களாதேஷ் அணியை எதிர்கொள்வது குறித்து ஒரு தெளிவான திட்டம் கிடைக்கும். இதிலிருந்து, இந்திய A அணியை பிசிசிஐ முன்கூட்டியே அனுப்பி நல்ல திட்டம் போட்டுள்ளதாக தெரிகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here