தமிழகத்தில் நாளை குரூப் 1 முதல்நிலை போட்டி தேர்வு .,, பள்ளிகள் இயங்குமா? எழுந்த பெரும் குழப்பம்!!

0
தமிழகத்தில் நாளை குரூப் 1 முதல்நிலை போட்டி தேர்வு .,, பள்ளிகள் இயங்குமா? எழுந்த பெரும் குழப்பம்!!
தமிழகத்தில் நாளை குரூப் 1 முதல்நிலை போட்டி தேர்வு .,, பள்ளிகள் இயங்குமா? எழுந்த பெரும் குழப்பம்!!

தமிழகத்தில் நாளை குரூப் 1 பதவிகளுக்கான முதல்நிலை போட்டி தேர்வு நடைபெற உள்ளதால் மாநிலத்தில் பள்ளிகள் இயங்குமா, இயங்காத என்ற குழப்பம் ஆசிரியர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

பெரும் குழப்பம்:

தமிழகத்தில் தீபாவளி பண்டிகை கடந்த மாதம் 24ம் தேதி கொண்டாடப்பட்ட நிலையில், சொந்த ஊருக்கு சென்றவர்களுக்கு ஏதுவாக அக்.,25ம் தேதியும் கூடுதலாக விடுமுறை அளிக்கப்பட்டது. இருப்பினும் இந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக, நவம்பர் 19 ஆம்தேதி பணி நாளாக அனுசரிக்கப்படும் என்று தமிழக அரசு உத்தரவிட்டது. இந்த உத்தரவின் பேரில் நாளை, பள்ளி கல்லூரிகள் வழக்கம் போல் செயல்படும் என செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. இருப்பினும் இதில் தற்போது ஒரு குழப்பம் ஏற்பட்டுள்ளது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

அதாவது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 1 பதவிகளுக்கான முதல்நிலை போட்டி தேர்வு நாளை (19.11.2022) நடைபெற உள்ளது. இதையொட்டி மாநிலத்தில் உள்ள அரசு. தனியார் பள்ளிகள் தேர்வு மையங்களாக ஒதுக்கப்பட்டு உள்ளது. மேலும் பள்ளி ஆசிரியர்களும் குரூப் 1 தேர்வுக்கான கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டு உள்ளனர். இதுமட்டுமல்லாமல் நாளை, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு, சில பாடங்களுக்கான Mid term exam நடக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

பெட்ரோல், டீசல் இன்றைய விலை நிலவரம்(18.11.2022)-முழு விவரம் உள்ளே!

இந்நிலையில் குரூப் 1 முதல்நிலை போட்டி தேர்வுக்காக ஒதுக்கப்பட்ட பள்ளிகள் எப்படி நாளை செயல்பட முடியும். மேலும் குரூப் 1 தேர்வுக்கு கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்ட ஆசிரியர்களும் எப்படி பணிக்கு செல்ல முடியும் என்று பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இந்த குழப்பத்தை போக்கும் வகையில் நாளை பள்ளிகள் இயங்குமா? இயங்காத? என்ற தெளிவான விளக்கத்தை கொடுக்குமாறு பள்ளிக்கல்வி துறைக்கு ஆசிரியர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here