ITTF 2022: அரையிறுதியில் நுழைந்தார் மனிகா பத்ரா…, இறுதிப்போட்டிக்கு முன்னேறுவாரா??

0
ITTF 2022: அரையிறுதியில் நுழைந்தார் மனிகா பத்ரா..., இறுதிப்போட்டிக்கு முன்னேறுவாரா??
ITTF 2022: அரையிறுதியில் நுழைந்தார் மனிகா பத்ரா..., இறுதிப்போட்டிக்கு முன்னேறுவாரா??

இந்தியாவின் மனிகா பத்ரா காலிறுதி போட்டியில் தைவான் வீராங்கனையை வீழ்த்தி ஆசிய கோப்பையின் அரையிறுதியில் நுழைந்த முதல் இந்திய பெண் என்ற பெருமையை அடைந்தார்.

டேபிள் டென்னிஸ்:

பாங்காக்கில் சர்வதேச டேபிள் டென்னிஸ் கூட்டமைப்பு (ITTF) மற்றும் ஆசிய டேபிள் டென்னிஸ் யூனியன் (ATTU) இணைந்து கடந்த 16ம் தேதி முதல் ஆடவர் மற்றும் மகளிருக்கான ஒற்றை பிரிவு போட்டிகளை நடத்தி வருகின்றன. இந்த போட்டியில், இந்தியாவின் நட்சத்திர வீரர்களான சரத் கமல், சத்தியன் ஞானசேகரன் மற்றும் மனிகா பத்ரா ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இதில், மகளிருக்கான ஒற்றையர் பிரிவின் 16 வது சுற்றில், இந்தியாவின் மனிகா பத்ரா, உலக தரவரிசையில் 7 வது இடத்தில் இருக்கும் சீன வீராங்கனையான சென் ஜிங்டாங் எதிர்த்துப் போட்டியிட்டார். இந்த போட்டியில், கடுமையாக போராடிய மனிகா பத்ரா 4-3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார். இந்த காலிறுதியில், இன்று தைவான் வீராங்கனையான சென் சு-யுவை எதிர்கொண்டார்.

ISL லீக் 2022: பெங்களூரு அணியை வீழ்த்திய மும்பை சிட்டி…, 2 வது இடத்துக்கு முன்னேறி அசத்தல்!!

இதில், முதல் செட்டை 6-11 என்ற கணக்கில் இழந்த மனிகா பத்ரா, அடுத்த மூன்று செட்டுகளில் எழுச்சி கண்டு 11-6, 11-5, 11-7 எளிதாக கைப்பற்றினார். இதன் பின் சுதாரித்து கொண்ட தைவான் வீராங்கனை 8-11, 9-11 என அடுத்த இரு செட்டையும் தனதாக்கிக்கொண்டார். இதனால், ஆறு செட்கள் முடிவில், 3-3 என இருவரும் சமநிலையில் இருந்தனர். இதையடுத்து வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் இறுதி செட்டில் இந்தியாவின் மனிகா பத்ரா 11-9 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்குள் நுழைந்தார். இவர் அரையிறுதிலும், வெற்றி பெற்று பதக்கம் வெல்லுவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here