இந்த 5 ராசியை சேர்ந்தவர்களா நீங்க.., உங்களுக்கு இந்த விஷயம் எல்லாம் நடக்க போகுது.., முழு ராசிபலன் உள்ளே!!

0
இந்த 5 ராசியை சேர்ந்தவர்களா நீங்க.., உங்களுக்கு இந்த விஷயம் எல்லாம் நடக்க போகுது.., முழு ராசிபலன் உள்ளே!!
இந்த 5 ராசியை சேர்ந்தவர்களா நீங்க.., உங்களுக்கு இந்த விஷயம் எல்லாம் நடக்க போகுது.., முழு ராசிபலன் உள்ளே!!

enewz வாடிக்கையாளர்களே, இன்றைய நாள் உங்களுக்கு எப்படி அமைய போகிறது என்பதை இந்த பதிவில் காணலாம்.

மேஷம் ராசிபலன்:

மேஷ ராசி நேயர்களே. இன்று உங்கள் வாழ்க்கையை மாற்றி அமைக்க கூடிய சம்பவம் நடக்கும். பொறுமையை கைப்பிடிக்க வேண்டிய நாள். நீண்ட நாட்கள் வராமல் இருந்த பணம் வந்து சேரும். வீட்டில் சுப காரியங்கள் நடைபெறும். உறவினர்களால் சில தொல்லைகள் வரலாம்.

ரிஷபம் ராசிபலன்:

ரிஷப ராசி நேயர்களே, வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. பொது இடங்களில் வார்த்தையை பார்த்து விடுங்கள். நண்பர்களால் ஆதாயம் கிட்டும். வீண் செலவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. அலுவலங்களில் மேலதிகாரிகளிடம் திட்டு வாங்க வாய்ப்பு உள்ளது. கவனமாக இருக்க வேண்டிய நாள்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

மிதுனம் ராசிபலன்:

மிதுன ராசி நேயர்களே, பிரிந்து இருந்த சொந்தங்கள் கூடும் நேரம் இது. சொத தொழில் செய்பவர்களுக்கு லாபம் அதிகரிக்கும். வாகனங்கள் வாங்க யோகமான நாள் இன்று. தம்பதிகள் இடையே அந்நியோன்யம் கூடும். உங்கள் எண்ணத்திற்கு ஏற்ப இந்த நாள் உங்களுக்கு அமையும்.

கடகம் ராசிபலன்:

கடக ராசி நேயர்களே, உங்களுக்கு அதிர்ஷ்டம் தர கூடிய நாளாக இன்று அமையும். வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது. அக்கம் பக்கத்தினரிடம் அனுசரித்து செல்வது நல்லது. வீண் விரயங்கள் வந்து செல்லும். பொறுமையுடன் இருந்தால் வெற்றி நிச்சயம்.

சிம்மம் ராசிபலன்:

சிம்ம ராசி நேயர்களே, கணவன் மனைவியிடையே அன்பு அதிகரிக்கும். பிள்ளைகளால் நன்மை உண்டாகும். தேவையில்லாமல் பணத்தை செலவழிப்பதை தவிர்க்கவும். அலுவலகத்தில் உங்களுக்கு நல்ல மதிப்பு கிடைக்கும். வீட்டில் சந்தோசம் பெருகும் நாளாக அமையும்.

கன்னி ராசிபலன்:

கன்னி ராசி நேயர்களே, காதல் கைகூடும் நாள் இது. வேலை தேடி வருபவர்களுக்கு நிச்சயம் இன்று வேலை கிடைக்கும். வாகனங்களில் செல்பவர்கள் கவனமாக இருப்பது நல்லது. நினைத்த காரியத்தை நிறைவேற்றும் நாளாக இன்று உங்களுக்கு அமையும்.

துலாம் ராசிபலன்:

துலாம் ராசி நேயர்களே, எந்த ஒரு காரியத்தை செய்தாலும் நன்றாக யோசித்து செயல்படுங்கள். உங்கள் எதிரிகளை அடையாளம் காணும் நாள் இது. ஜாக்ரதையாக இருக்க வேண்டிய நாளும் கூட. பண விஷயத்தில் யாரையும் நம்ப வேண்டாம்.

விருச்சிக ராசிபலன்:

விருச்சிக ராசி நேயர்களே, உங்கள் கோவத்தை கட்டுப்படுத்துவது நல்லது. வீட்டில் உள்ளவர்களிடன் அனுசரித்து செல்லுங்கள். கவனமாக இருக்க கூடிய நாள் இது. நகைகள் வாங்க முடிவு எடுப்பீர்கள். குடும்பத்துடன் வெளியூருக்கு சென்று வருவீர்கள்.

தனுசு ராசிபலன்:

தனுசு ராசி நேயர்களே, உங்களுக்கு வீண் விரயங்கள் உண்டாகும் நாள் இது. தேவையில்லாமல் எந்த விஷயத்திலும் மூக்கை நுழைக்காதீர்கள். கோவிலுக்கு சென்று வாந்தால் மனநிம்மதி உண்டாகும். உங்களுக்கு விருப்பட்ட காரியத்தை செய்து முடிப்பீர்கள்.


மகரம் ராசிபலன்:

மகர ராசி நேயர்களே, உங்களுக்கு இன்பமும் துன்பமும் கலந்து போல இந்த நாள் அமையும். எந்த ஒரு காரியம் செய்தலும் அதில் இடைஞ்சல் தான் வந்து சேரும். தேவையில்லாத பேச்சுக்களை தவிர்க்கவும். வேலையில் அதிக கவனம் இருப்பது நல்லது.

கும்பம் ராசிபலன்:

கும்ப ராசி நேயர்களே, அலுவலகத்தில் உங்களது வேலைக்கு நல்ல சன்மானம் கிடைக்கும். விட்டு போன உறவுகள் மறுபடியும் வந்து சேரும். விட்டு கொடுத்து போனால் சந்தோசம் கிட்டும். லாபத்தை ஈட்ட கூடிய நாளாக இன்று உங்களுக்கு அமையும்.


மீனம் ராசிபலன்:

மீன ராசி நேயர்களே, சுப செய்தி உங்களுக்காக காத்து கொண்டுள்ளது. பிள்ளைகள் மூலம் உங்களுக்கு நன்மை உண்டாகும். நினைத்த காரியத்தை செய்து முடிப்பீர்கள். பொறுமையாக இருக்க வேண்டிய நாள். சாட்சி கையெழுத்து போடுவதை தவிர்த்து விடுங்கள். யோகமான நாளாக உங்களுக்கு அமையும். வெற்றி கிட்டும் நாள்’ இது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here