முல்லை அம்மாவை சீண்டி பார்த்த மீனா, ஐஸ்வர்யா.., சரியான ஆப்பு வைத்த பார்வதி.., இன்றைய பாண்டியன் ஸ்டோர்ஸ் எபிசோட்!!

0
முல்லை அம்மாவை சீண்டி பார்த்த மீனா, ஐஸ்வர்யா.., சரியான ஆப்பு வைத்த பார்வதி.., இன்றைய பாண்டியன் ஸ்டோர்ஸ் எபிசோட்!!
முல்லை அம்மாவை சீண்டி பார்த்த மீனா, ஐஸ்வர்யா.., சரியான ஆப்பு வைத்த பார்வதி.., இன்றைய பாண்டியன் ஸ்டோர்ஸ் எபிசோட்!!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில், மீனா மற்றும் ஐஸ்வர்யா சேட்டைகள் நாளுக்கு நாள் அதிகமாகிட்டே போகுது. இந்நிலையில் இன்றைய எபிசோடில் என்ன நடக்கிறது என்பதை பார்க்கலாம்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் எபிசோட்:

பாண்டியன் ஸ்டோர்ஸ் இன்றைய எபிசோடில், தூங்கி கொண்டிருந்த மீனா, ஐஸ்வர்யா, கண்ணன் ஆகிய மூவரையும் தனம் எழுப்ப, அவர்கள் யாரும் எழுந்திருக்காமல், தூக்கம் வருது தூக்கம் வருது என புலம்புகின்றனர். இதையடுத்து தனம் மீண்டும் எழுப்ப, எழுந்து அமர்ந்து, கொஞ்ச நேர தூங்க விடுறிங்களா, நைட்டு தூங்கவே இல்லை என்று மீனாவும், ஐஸ்வர்யாவும் கெஞ்ச, முல்லை நீங்க ரெண்டு பேரும் ரூம்ல போய் தூங்குங்க என்று சொல்கிறார். இதையடுத்து இருவரும் ரூமுக்கு செல்ல, அங்கு முல்லை அம்மா குறட்டை விட்டு தூங்கி கொண்டிருக்கிறார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அவரை எப்படியாவது எழுப்பி, இங்க இருந்து விரட்ட வேண்டும் என்று மீனாவும், ஐஸ்வர்யாவும் பிளான் செய்து, வெளீல பயங்கர பிரச்சனை நடக்குது இன்னும் நீங்க தூங்கிட்டு இருக்கீங்க என்று மீனாவும், ஐஸ்வர்யாவும் சொல்ல, முல்லை அம்மா வேகமாக படுக்கையில் இருந்து எழுந்து போய் விட்டார். இதையடுத்து இருவரும் அந்த படுக்கையில் போய் படுத்துவிட்டனர். திரும்பி வந்த முல்லை அம்மா, இதுக்கு தான் என்ன எழும்பி விட்டிங்களா, தூங்குறதுக்கு இடம் இல்லாம இப்படி நீங்க அலையுறது, பாக்கவே சந்தோசமா இருக்கு என்று சொல்லிவிட்டு சென்று விட்டார்.

கவலையில் தவிக்கும் பாக்கியா குடும்பம்.,, கோபியின் சந்தோஷத்திற்கு ஆப்பு வைத்த இனியா., பாக்கியலட்சுமி இன்றைய எபிசோட்!

இதையடுத்து மீனாவும், ஐஸ்வர்யாவும் தூக்கி எழுந்து ஹாலுக்கு வரும் போது முல்லை அனைவருக்கும் டீ கொடுக்கிறார், இதையடுத்து இருவரும் குளிக்க போக, அங்கயும் இவர்களுக்கு போட்டி வந்துவிட்டது. மீனா, நான் தான் first குளிப்பேன் நீ அப்புறம் குளி என்று ஐஸ்வர்யாவை விரட்ட, இவர்கள் இரண்டுபேரையும் தள்ளிவிட்டு முல்லை அம்மா, பாத்ரூமுக்கு சென்று விட்டார். இதையடுத்து மீனா, இந்த பாத்ரூம் பிரச்சனை எங்க போனாலும் என்ன விடாது போல என புலம்ப ஆரம்பித்துவிட்டார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here