கவலையில் தவிக்கும் பாக்கியா குடும்பம்.,, கோபியின் சந்தோஷத்திற்கு ஆப்பு வைத்த இனியா., பாக்கியலட்சுமி இன்றைய எபிசோட்!

0
கவலையில் தவிக்கும் பாக்கியா குடும்பம்.,, கோபியின் சந்தோஷத்திற்கு ஆப்பு வைத்த இனியா., பாக்கியலட்சுமி இன்றைய எபிசோட்!
கவலையில் தவிக்கும் பாக்கியா குடும்பம்.,, கோபியின் சந்தோஷத்திற்கு ஆப்பு வைத்த இனியா., பாக்கியலட்சுமி இன்றைய எபிசோட்!

பாக்கியலட்சுமி சீரியலில், கோபி நினைத்தது போல் இனியாவை தன்னுடன் அழைத்து சென்று விட்டார். இதனால் பாக்கியா குடும்பமே ஆழ்ந்த கவலையில் உள்ளனர். இந்நிலையில் இன்றைய எபிசோடில் என்ன நடக்கிறது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

பாக்கியலட்சுமி:

பாக்கியலட்சுமி சீரியலில், இனியா கோபியுடன் சென்றதால் பாக்கியா உட்பட குடும்பத்தினர் அனைவரும் மிகவும் வருத்தமாக இருக்கின்றனர். இதை பார்த்து எழில் நான் போய், இனியாவை அழைத்து வருகிறேன் என்று சொல்ல, ராமமூர்த்தி வேண்டாம் என்று தடுக்கிறார். இவரை தொடர்ந்து செல்வி, இனியா பாப்பா போனது எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு, நான் போய் கூட்டிட்டு வரேன் என்று சொல்ல, அவரையும் வேண்டாம் என தடுத்து நிறுத்துகிறார் ராமமூர்த்தி.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இன்னொரு பக்கம் இனியா கோபி மற்றும் மயூரா என மூவரும் கேரம் விளையாடிக் கொண்டிருக்க, அப்போது ராதிகா இனியாவுக்காக புது டிரஸ்களை வாங்கி வருகிறார். இதனால் கோபி, ராதிகாவுக்கு thanks சொல்லுகிறார். பின் இனியாவிடம் புது ட்ரெஸ் கொடுத்து change பண்ணிட்டு வர சொல்ல, அவரும் டிரஸ் change செய்து வருகிறார். மறுபுறம் நடந்ததை நினைத்து கொண்டு பாக்கியா குடும்பத்தினர் அனைவரும் தூங்காமல் இருக்க, ஈஸ்வரி ஜெனியை நீ போய் தூங்கு என்று சொல்கிறார். அதற்கு ஜெனி எல்லாரும் இப்படி வருத்தமா இருக்கும் போது நான் எப்படி தூங்க முடியும் என்று கேட்கிறார்.

இந்த பக்கம் இனியா, எனக்கு தூக்கம் வருது என்று சொல்ல, கோபி ராதிகாவிடம் இப்போ நம்ம நாலு பேரு இருக்கோம், வீடு வேற சின்ன வீடா இருக்கு எப்படி பத்தும் என்று கேட்க, அதற்கு அவர் ரூமில் இனியாவும், மயூவும் தூங்கட்டும் நம்ம, ஹாலில் தூங்கலாம் என்று சொல்ல, கல்யாணத்துக்கு அப்புறம் இப்பதான் நம்ம தனியா தூங்க போறோம் என்று கோபிக்கு ஒரே ஹாப்பி தான்.

விஜய் டிவியை அநியாயமாக நம்பி காணாமல் போன முக்கிய பிரபலம்.., கடைசியில் வாய்ப்பு கிடைக்காமல் தவிக்கு அவலம்!!

இருப்பினும் இனியா ரூமில் இருந்து வந்து டாடி நான் உங்க கூடயே தூங்குறேன் என்று சொல்ல, ராதிகா, மயூ தனியா இருப்பா நான் போறேன் என்று சொல்லி விட்டு ரூமுக்கு சென்று விட்டார். மறுபுறம் எழில் குடும்பத்தினர் அனைவரையும் சமாதானம் செய்து தூங்க வைக்கிறார். இதையடுத்து பாக்கியா இனியா போட்டோவை பார்த்து மிகவும் வருத்தப்படுகிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here