புதுச்சேரியில் நான்கு எம்எல்ஏ.,க்கள் ராஜினாமா – பெரும்பான்மையை இழந்த ஆளும் அரசு!!

0

புதுச்சேரியில் முதல்வர் நாராயணசாமி தலைமையிலான அரசின் கீழ் இருந்த நான்கு எம்எல்ஏ.,க்கள் ராஜினாமா செய்துள்ளனர். அதனால் புதுச்சேரியில் ஆளும் கட்சியான காங்கிரஸ் அரசு சட்டப்பேரவையில் தனது பெரும்பான்மையை இழந்துள்ளது.

நான்கு எம்எல்ஏ.,க்கள் ராஜினாமா

புதுச்சேரி காமராஜர் தொகுதியில் எம்எல்ஏவாக இருந்த ஜான்குமார், தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். தொடர்ந்து தனது ராஜினாமா கடிதத்தை சட்டப்பேரவை சபாநாயகரிடம் எம்எல்ஏ ஜான்குமார் கொடுத்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு புதுச்சேரியில் அமைச்சர் நமச்சிவாயம் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். பதவி விலகிய அமைச்சர் நமச்சிவாயம் பாஜக தலைவர்கள் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார். இவரது பதவி விலகல் கட்சியில் எத்தகைய பாதிப்பையும் ஏற்படுத்தாது என முதல்வர் நாராயணசாமி தெரிவித்திருந்தார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதைத் தொடர்ந்து அக்கட்சியில் எம்எல்ஏ.,வாக இருந்த தீப்பாய்ந்தான் மற்றும் மல்லாடி கிருஷ்ணாராவ் ஆகியோரும் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர். இந்நிலையில் காமராஜர் தொகுதியில் எம்எல்ஏ.,வாக இருந்த ஜான்குமார் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். கடந்த 2016ம் ஆண்டு புதுச்சேரி நெல்லித்தோப்பு தொகுதியில் நாராயணசாமி போட்டியிடுவதற்காக ஜான்குமார் தனது தொகுதியை விட்டுக்கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

8 ஆண்டுகளுக்கு பிறகு பாரதி வீட்டிற்குள் நுழையும் கண்ணம்மா – எதிர்பாரா திருப்பங்களுடன் “பாரதி கண்ணம்மா” சீரியல்!!

தற்போது புதுச்சேரியில் ஆளும் கட்சியான காங்கிரஸ் சார்பில் 10 எம்எல்ஏ.,க்களும், அதன் கூட்டணி கட்சியான திமுகவில் 3 எம்எல்ஏக்களும், சுயேச்சை ஆதரவு என சட்டப்பேரவையில் ஆளும்கட்சியின் கூட்டணி பலம் 14 ஆக உள்ளது. இதேபோல் எதிர் கட்சியான என்ஆர் காங்கிரஸ் சார்பில் 7 எம்எல்ஏ.,க்கள், அதிமுக சார்பில் 4 எம்எல்ஏ.,க்கள், பாஜக சார்பில் 3 எம்எல்ஏ.,க்கள் என எதிர்கட்சியின் கூட்டணியின் பலம் 14 ஆக உள்ளது. இதனால் சட்டப்பேரவையில் நாராயணசாமி தலைமையிலான அரசு தனது பெரும்பான்மையை இழந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here