10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்தாகுமா?? அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்!!

0

கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் தாமதமாக திறக்கப்பட்ட சூழ்நிலையில் கண்டிப்பாக பொதுதேர்வுகள் நடத்தப்படும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

பொதுத்தேர்வுகள் நடத்தப்படும்

இந்தியா முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகளுக்கு கடந்த 9 மாதங்களாக விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது. கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து பல மாநிலங்களில் பள்ளிகள் மீண்டுமாக திறக்கப்பட்டன. தொடர்ந்து தமிழ்நாட்டில் ஜனவரி 19 ம் தேதி அரசு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மட்டும் தேர்வு எழுதுவதற்கு வசதியாக பாடங்களை நடத்த பள்ளிகள் திறக்கப்பட்டன.

டெல்லி விவசாயிகள் போராட்டம் – ஒருவர் உயிரிழப்பு!!

தொடர்ந்து 9 ம் வகுப்பு மற்றும் 11 ம் வகுப்பு மாணவர்களுக்கு எப்போது பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதுகுறித்து முதல்வர் பழனிச்சாமி தான் முடிவெடுக்கவேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

மேலும் கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்படுமா என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு ‘இந்த ஆண்டு நிச்சயமாக பொதுத்தேர்வுகள் நடத்தப்படும். கொரோனா பரவல் காரணமாக பொதுத்தேர்வு நடத்துவதில் சில மாற்றங்கள் கொண்டுவரப்படும். ஏற்கனவே மாணவர்கள் படிப்பதற்கு வசதியாக பாடங்கள் குறைக்கப்பட்டுள்ளது. தேர்வுகள் எளிய முறையில் நடத்தப்படும். அதற்கான அறிவிப்புகள் முதல்வரின் அனுமதி பெற்றவுடன் வெளியாகும்’ எனவும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here