டெல்லியில் இணையதள சேவைகள் துண்டிப்பு – வலுப்பெறும் விவசாயிகள் போராட்டம்!!

0

விவசாயிகளின் போராட்டங்கள் தீவிரமடைவதால் தலைநகர் டெல்லியில் பல இடங்களில் இணையதள சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளது. போராட்டம் தீவிரப்படுவதை தவிர்க்க சேவைக்க துண்டிக்கப்பட்டதாக காவல்துறை அறிவித்துள்ளது.

இணையதள சேவைகள் துண்டிப்பு

தற்போது மிக தீவிரமாக நடந்து வரும் விவசாயிகளின் போராட்டம் மேலும் அதிகரிக்கிறது. இன்று காலை நடைபெற்ற பேரணியில் டெல்லிக்கு உள்ளே விவசாயிகளை அனுப்ப மறுத்ததால் போராட்டக்கார்களுக்கும் போலீசாருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டதை தொடர்ந்து போலீசார் கண்ணீர் புகைக்குண்டு வீசி போராட்டக்கார்களை அப்புறப்படுத்தினர்.

‘கர்ணன் அனைத்தையும் கொடுப்பான்’ – இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன்!!

இதனால் போராட்டக்கார்கள் டெல்லி தலைமை காவல்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும் டெல்லி செங்கோட்டை கொடிக்கம்பத்தில் விவசாயிகளின் கொடியை ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தற்போது இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட ஒருவர் போலீசார் நடத்திய தடியடியில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இதையடுத்து தற்போது டெல்லியில் இணையதள சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளது. தீவிரமடைந்துள்ள விவசாயிகளின் போராட்டம் மேலும் தீவிரமடையும் என்ற கணிப்பில் பெரும்பாலான பகுதிகளில் இணையதள சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளதாக டில்லி காவல்துறை அறிவித்துள்ளது. மேலும் அடுத்த அறிவிப்பு வரும் வரை இணையசேவைகள் நிறுத்திவைக்கப்படும் எனவும் அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here