சையது முஷ்டாக் அலி கோப்பை – அரை இறுதிக்கு முன்னேறிய பஞ்சாப்!!

0

சையது முஷ்டாக் அலி கோப்பைக்கான காலிறுதி சுற்றுகள் தற்போது நடைபெற்று வருகிறது. முதல் காலிறுதி சுற்றில் மோதிய கர்நாடக மற்றும் பஞ்சாப் அணிகளின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது.

சையது முஷ்டாக் அலி:

தற்போது இந்தியாவில் உள் நாட்டு தொடரான சையது முஷ்டாக் அலி கோப்பைக்கான தொடர் நடைபெற்று வருகிறது. உள் நாட்டு தொடர்கள் தொடங்க தாமதமான நிலையில் முதலாவதாக சையது முஷ்டாக் அலி கோப்பை நடத்த பிசிசிஐ திட்டமிட்டு நடத்தி வருகிறது. தற்போது இந்த தொடருக்கான லீக் சுற்றுகள் அனைத்தும் முடிவடைந்து விட்டது. தற்போது காலிறுதி சுற்றுகள் நடைபெற்று வருகிறது. முதலாவது கால் இறுதி போட்டியில் நடப்பு சாம்பியனான கர்நாடக மற்றும் பஞ்சாப் அணிகள் மோதின.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்த போட்டி உலகின் பெரிய மைதானமான அஹமதாபாத் மோடெரோ மைதானத்தில் வைத்து நடைபெற்றது. இந்த மைதானத்தில் சுமார் 1 லட்சத்து 10 ஆயிரம் ரசிகர்கள் இருந்து காணும் அளவிற்கு பெரிய மைதானம். ஆனால் தற்போது கொரோனா அச்சம் காரணமாக ரசிகர்கள் யாரையும் அனுமதிக்கவில்லை. தற்போது போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்த போட்டியின் பஞ்சாப் அணி சிறப்பாக பந்துவீசியது. கர்நாடக அணி பேட்ஸ்மேன்கள் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறி வந்தனர்.

பின்னழகை காட்டி கவர்ச்சி புகைப்படம் வெளியிட்ட சமந்தா – ஏக குஷியில் ரசிகர்கள்!!

காலிறுதி சுற்றுக்கு முன்னேற்றம்:

முடிவில் கர்நாடக அணி 87 ரன்களுக்கு தனது அனைத்து விக்கெட்களையும் இழந்தது. கர்நாடக அணி தரப்பில் அதிகபட்சமாக அனிருத்தா ஜோஷி 27 ரன்களை எடுத்துள்ளார். பஞ்சாப் அணியின் சித்தார்த் அதிகபட்சமாக 3 விக்கெட்களை எடுத்துள்ளார். அதன்பிறகு களமிறங்கிய பஞ்சாப் அணி 12.4 வர்களில் 1 விக்கெட்டை இழந்து 89 ரன்களை குவித்து தனது வெற்றியை பதிவு செய்து அசத்தியது. பஞ்சாப் அணி தரப்பில் அதிகபட்சமாக பிரப்சிம்ரன் சிங் அதிகபட்சமாக 49 ரன்களை குவித்துள்ளார். இந்த வெற்றியின் மூலம் பஞ்சாப் அணி காலிறுதி போட்டிக்கி முன்னேறி அசத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here