விவசாயிகள் போரட்டம் எதிரொலி – தலைநகர் டெல்லியில் மெட்ரோ ரயில் சேவைகள் முடக்கம்!!

0

தலைநகர் டெல்லியில் இன்று விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணி வன்முறையாக வெடித்ததை அடுத்து தற்போது பலத்த போலீஸ் பாதுகாப்பு குவிக்கப்பட்டுள்ளது. அதே போல் டெல்லியில் மெட்ரோ ரயில் சேவையும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

குடியரசு தின விழா கொண்டாட்டம்:

இன்று தலைநகர் டெல்லியில் 72 வது குடியரசு தின விழா கொண்டாட்டம் நடைபெற்றது. இன்று பல வித சிறப்புகளுடனும், கொரோனா பொது முடக்க நடவடிக்கைகளுடனும் இன்று விழா நடைபெற்றது.

Farmers' Republic Day tractor parade: Tableaux to depict protest against agri laws - The Hindu

இது ஒரு பக்கம் இருக்க, கடந்த இரு மாதங்களாக மத்திய அரசு நிறைவேற்றி உள்ள வேளாண் சட்டங்களை நிறுத்தி வைக்க கோரி டெல்லியில் 6 மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் போராடி வருகின்றனர். இன்று குடியரசு தின விழாவினை முன்னிட்டு டிராக்டர் பேரணி நடைபெறும் என்று விவசாயிகள் ஏற்கனவே அறிவித்து இருந்தனர்.

10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்தாகுமா?? அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்!!

Latest News Live Updates On Farmrers Protest, Coronavirus, Republic Day: Police Use Mild Lathicharge At Red Fort To Remove Protesters

அதனை முன்னிட்டு இன்று விவசாயிகளின் டிராக்டர் பேரணியும் நடைபெற்றது. பேரணி ஒரு கட்டத்தில் வன்முறையாக வெடித்தது. இதன் காரணமாக இன்று தலைநகரில் மக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது. இதனால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யபட்டு உள்ளது. போராட்ட பகுதியில் இருந்து தவறான தகவல்கள் பரவ கூடாது என்றும், வதந்திகள் பரவுவதை தடுக்கவும் தலைநகரில் இணைய வசதி துண்டிக்கப்பட்டுள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

In Pics | Farmers' Protest Rally On Republic Day 2021

அதே போல் “க்ரே லைன்” என்று கூறப்படும் டெல்லியின் மெட்ரோ சேவைகளும் தற்போதைய சூழ்நிலை காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் டெல்லியின் முக்கிய பகுதிகளான நாடாளுமன்றம், உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றம், பிரதமர் மளிகை போன்ற இடங்களில் நுழைந்து விட கூடாது என்று பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here