‘பாதி மீசையோடு விளையாட தயார்’ – புஜாராவிற்கு சவால் விடுத்த அஸ்வின்!!

0

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்தியா அணியின் முன்னணி பேட்ஸ்மேனான புஜாரா மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மேலும் இந்தியா அணி வெற்றி பெறுவதற்கு தக்க உறுதுணையாக இருந்துள்ளார். தற்போது இவருக்கு இந்தியா அணியின் அஸ்வின் ஓர் சவாலை விடுத்துள்ளார்.

புஜாரா:

ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்தியா அணி டி 20 மற்றும் புகழ்மிக்க பார்டர் கவாஸ்கர் கோப்பையை கைப்பற்றி அசத்தியது. அதிலும் குறிப்பாக டெஸ்ட் தொடரில் இந்தியா அணியின் முன்னணி வீரர்கள் பலர் காயத்தினால் அவதிப்பட்டு வந்த நிலையிலும் கூட இந்தியா அணி இந்த சாதனையை படைத்துள்ளது. இது அனைவராலும் பாராட்டத்தக்கது. இந்தியா அணி வீரர்களின் செயல்பாடு டெஸ்ட் போட்டியில் மிக சிறப்பாக இருந்தது. அதிலும் குறிப்பாக இந்தியா அணியின் நவின கிரிக்கெட்டின் தூண் என்று அழைக்கப்படும் புஜாரா இந்த போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தான் மட்டும் ரன்கள் குவிக்க வேண்டும் என்று எண்ணாமல் அணிக்காக ரன்களை சேர்த்து வந்தார். மேலும் களத்தில் மற்ற வீரர்களுடன் சிறப்பாக கூட்டணி அமைத்தும் விளையாடி வந்தார். மேலும் கடைசி டெஸ்ட் போட்டியில் இவரின் ஆட்டத்தால் தான் இந்தியா அணி சுலபமாக வெற்றியை பதிவு செய்தது என்றே சொல்லலாம். ஆனால் இவர் விளையாடிய போது கை, தலை என சுமார் 10 இடங்களில் அடி வாங்கியுள்ளார். இருந்தும் இவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திவந்துள்ளார். தற்போது இதுகுறித்து யூடியூப் சேனலில் பேசிய இந்தியா அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் கூறியதாவது, ஆஸ்திரேலியா தொடரில் புஜாராவின் ஆட்டம் பாராட்டுக்குரியதே.

10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்தாகுமா?? அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்!!

பாதி மீசையுடன் விளையாட தயார்:

மேலும் தற்போது வரப்போகும் டெஸ்ட் தொடரிலும் இவர் இதே போல் ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். மேலும் புஜாராவிற்கு ஓப்பனாக ஓர் சவாலையும் விடுத்துள்ளார் அஸ்வின். அதுஎன்னவென்றால்,”அடுத்து நடைபெற உள்ள இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மெயின் அலி போன்ற ஸ்பின்னர்களை எதிர்கொண்டு ஓவர் தி டாப் விளையாட வேண்டும். அப்படி சிறப்பாக அவர் விளையாடினால் களத்தில் பாதி மீசையுடன் விளையாட நான் தயாராக உள்ளேன்” என்று அஸ்வின் சவால் விடுத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here