ட்ரெண்டாகும் அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் – உற்சாகத்தில் தல ரசிகர்கள்!!

0

வலிமை படத்தில் நடித்துவரும் நடிகர் அஜீத்தின் புகைப்படங்கள் தற்போது இணையதளத்தில் வெளியாகி ட்விட்டரில் வைரல் செய்யப்பட்டு வருகிறது. வலிமை அப்டேட் பற்றி கேட்டு வந்த ரசிகர்களை இந்த புகைப்படங்கள் உற்சாகப்படுத்தியிருக்கிறது.

அஜீத்தின் புகைப்படங்கள்

இயக்குனர் எச். வினோத் இயக்கத்தில் நடிகர் அஜீத் நடித்துவரும் புதிய ஆக்சன் த்ரில்லர் திரைப்படம் ‘வலிமை’. இந்த படத்தில் அஜீத்துடன் நடிகை ஹுமா குரேஷி மற்றும் ஜான்வி கபூர் நடித்துள்ளதாக தகவல்கள் வெளியானது. இப்படத்தை ‘நேர் கொண்ட பார்வை’ படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் தயாரித்துள்ளார். இப்படத்தின் இறுதிக்கட்ட காட்சிகள் தற்போது படமாக்கப்பட்டு வருகிறது. அஜீத் நடித்து கடைசியாக வெளியான படம் ‘நேர் கொண்ட பார்வை’ கடந்த 2019 ம் ஆண்டு வெளியானது.

‘பாதி மீசையோடு விளையாட தயார்’ – புஜாராவிற்கு சவால் விடுத்த அஸ்வின்!!

ஹைதராபாத், ராஜஸ்தான் ஆகிய இடங்களில் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது தென் ஆப்பிரிக்காவில் சண்டை காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. வரும் மே 1 ம் தேதி அஜீத்தின் பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்தை திரைக்கு கொண்டுவருவதற்காக படப்பிடிப்பு வேலைகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. முன்னணி கதாநாயகர்களின் படங்கள் வரிசையாக வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் வலிமை படத்தின் அப்டேட் கேட்டு ரசிகர்கள் நச்சரித்துவந்தனர்.

வலிமை படத்தின் அப்டேட்கள் இப்போதைக்கு இல்லை என படக்குழுவினர் கூறிவந்த நிலையில் தற்போது படப்பிடிப்பில் நடிகர் அஜீத்குமார் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையதளங்களில் வெளியாகியிருக்கிறது. அஜீத்தின் இந்த புகைப்படங்கள் தற்போது இந்திய அளவில் ட்விட்டரில் ரசிகர்களால் வைரல் செய்யப்பட்டு ட்ரெண்டாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here