விவசாயிகள் போராட்டம் எதிரொலி – டெல்லியில் 144 தடை உத்தரவு!!

0

டெல்லியில் தற்போது விவசாயிகளின் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. தற்போது இதனை தடுக்கும் வகையில் டெல்லியில் இன்று இரவு முதல் 144 தடை உத்தரவை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

டெல்லி:

கடந்த 2 மாத காலமாக விவசாயிகள் வேளாண் சட்டங்களை எதிர்த்து போராடி வருகின்றனர். தற்போது இன்று குடியரசு தின விழா என்பதால் இன்று விவசாயிகள் அனைவரும் டிராக்டர் மூலம் செங்கோட்டையை பார்த்து பேரணியை நடத்தினர். இந்த பேரணியால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனை தடுக்க டெல்லி போலீசார் சஞ்சய் காந்தி டிரான்ஸ்போர்ட் நகரில் விவசாயிகள் நுழையாத வகையில் தடுப்புகளை ஏற்படுத்தினார். ஆனால் அதனை விவசாயிகள் தகர்த்தனர். மேலும் செங்கோட்டையை முற்றுகையிட்டு அங்குள்ள தேசியக்கொடிக்கு பதில் விவசாய கோடியை ஏற்றினர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதனை தடுப்பதற்காக போலீசார் தடியடி நடத்தியும், கண்ணீர்ப்புகை வீசியும் வந்தனர். தடியடி நடத்தியதில் விவசாயி நவதீப் தனது உயிரை இழந்துள்ளார். தற்போது போராட்டத்தின் தீவிரத்தை தடுக்கும் வகையில் முக்கிய சாலைகளை மூடியுள்ளனர். மேலும் மெட்ரோ ரயில் சேவையையும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் இன்று இரவு வரை இணைய சேவையும் கிடையாது என்றும் தெரிவித்துள்ளனர். மேலும் குடியரசு தலைவர் இல்லம், நாடாளுமன்ற வளாகம், பிரதமர் இல்லம் போன்ற முக்கிய பகுதிகளில் போலீசார் குவிந்துள்ளனர்.

‘பாதி மீசையோடு விளையாட தயார்’ – புஜாராவிற்கு சவால் விடுத்த அஸ்வின்!!

144 தடை:

மேலும் தற்போது போராட்டத்தின் தீவிரத்தை குறைக்கும் வகையில் தற்போது 144 தடை உத்தரவு பிரிப்பிக்கப்பட்டுள்ளது. இன்று நள்ளிரவு முதல் 144 அமலுக்கு வரவுள்ளது. மேலும் இன்னும் இரண்டு நாட்களில் நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கவுள்ள நிலையில் 144 தடை உத்தரவு அடுத்த இரண்டு நாட்களுக்கு நீடிக்கப்பட வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here