எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்களே., டெபாசிட் தொகைக்கான வட்டி உயர்வு., வெளியான முக்கிய அறிவிப்பு!!!

0

இந்தியாவில் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு விதமான சலுகைகளை வழங்கி வருகிறது. அந்த வகையில், நேற்று (மே 15) முதல் டெபாசிட் தொகைக்கான வட்டி விகிதத்தை 25 முதல் 75 சதவீதம் வரை உயர்த்தி உள்ளதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். அது தொடர்பான விவரங்களை கீழே காணலாம்.

SBI புதிய டெபாசிட் வட்டி விகிதம்:
  • 7 முதல் 45 நாட்கள் வரை உள்ள வைப்பு நிதிக்கு 3.50 சதவீதமாகவும்,
  • 46 முதல் 179 நாட்கள் வரை உள்ள வைப்பு நிதிக்கு 5.50 சதவீதமாகவும்,
  • 180 முதல் 210 நாட்கள் வரை உள்ள வைப்பு நிதிக்கு 6 சதவீதமாகவும்,
  • 211 முதல் ஒரு ஆண்டு வரை உள்ள வைப்பு நிதிக்கு 6.25 சதவீதமாகவும்,
  • ஒரு ஆண்டு முதல் 2 ஆண்டுகள் வரை உள்ள வைப்பு நிதிக்கு 6.80 சதவீதமாகவும்,
  • 2 முதல் 3 ஆண்டுகள் வரை உள்ள வைப்பு நிதிக்கு 7 சதவீதமாகவும்,
  • 3 முதல் 5 ஆண்டுகள் வரை உள்ள வைப்பு நிதிக்கு 6.75 சதவீதமாகவும்,
  • 5 முதல் 10 ஆண்டுகள் வரையிலான வைப்பு நிதிக்கு 6.50 சதவீதமாகவும் வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

Enewz Tamil WhatsApp Channel 

IPL 2024: தோல்வியின் பிடியில் ராஜஸ்தான்.. எந்தெந்த அணிகளுக்கு எவ்வளவு புள்ளிகள்??

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here