பொன்னியின் செல்வனில் குந்தவையாக நடித்தது இந்த நடிகையின் மகளா? ஆச்சர்யத்தில் ரசிகர்கள்!

0
பொன்னியின் செல்வனில் குந்தவையாக நடித்தது இந்த நடிகையின் மகளா? ஆச்சர்யத்தில் ரசிகர்கள்!

இயக்குனர் மணிரத்னம் படைப்பில் உருவான பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் கடந்த 30ம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. முதல் பாகம் போலவே இரண்டாம் பாகமும் வசூலில் சக்கபோடு போட்டு வருகிறது. இப்படத்தில் நடித்த விக்ரம், ஜெயம் ரவி, கார்த்திக், த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பலரும் தங்களது கதாபாத்திரத்தில் அற்புதமாக நடித்து அசத்தி இருந்தனர்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இந்தத் திரைப்படத்தை நகர்த்திச் செல்லும் முக்கிய கதாபாத்திரமான நந்தினி கேரக்டரில் ஐஸ்வர்யா ராய் நடிக்க அவருடைய சிறு வயது நந்தினியாக தெய்வத்திருமகள் சாரா அர்ஜுன் நடித்திருந்தார். அதுமட்டுமின்றி விக்ரம் மற்றும் ஐஸ்வர்யாவின் காதல் காட்சிகள் அதிகம் பேசப்பட்டு வருகிறது. அதே போல் கார்த்திக் த்ரிஷாவின் லவ் கெமிஸ்ட்ரி சூப்பரா ஒர்க் அவுட் ஆனது என்றால் அது மிகையாகாது.

“ஜெயிலர்” படத்தின் ரிலீஸ் தேதி வெளியீடு – அதிகாரப்பூர்வ வீடியோவை வெளியிட்ட படக்குழுவினர்!!

இந்நிலையில் திரிஷா நடித்த குந்தவை கதாபாத்திரத்தின் சிறுவயது கேரக்டரில் நடித்தது யார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுப்பட்ட நிலையில் தற்போது இது குறித்து ஒரு தகவல் இணையத்தில் வெளியாகியுள்ளது. அதாவது பொன்னியின் செல்வன் படத்தில் சிறு வயது குந்தவையாக நடித்தது சீரியல் நடிகை கன்யா பாரதியின் மகள் என்பது தெரியவந்துள்ளது. தனது குடும்பத்துடன் அவர் எடுத்த புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here