அரசு ஊழியர்களுக்கு ஜூலை மாதத்திற்கான அகவிலைப்படி.., 46% ஆக உயர்வு!!

0
அரசு ஊழியர்களுக்கு ஜூலை மாதத்திற்கான அகவிலைப்படி.., 46% ஆக உயர்வு!!

ஆண்டுதோறும் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் 7வது ஊதியக்குழு பரிந்துரையின் கீழ், அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி (DA) உயர்த்தப்பட்டு வருகிறது. இந்த அகவிலைப்படியை, தொழில்துறை தொழிலாளர்களுக்கான நுகர்வோர் விலை குறியீட்டு (CPI-IW) முறையை அடிப்படையாகக் கொண்டே, மத்திய அரசு கணக்கிட்டு வருகிறது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இந்த கணக்கீட்டை பொறுத்ததே, அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை மத்திய அரசு உயர்த்தி வருகிறது. இதன்படி, கடந்த ஜனவரி மாதத்திற்கான அகவிலைப்படியை, இமாச்சல பிரதேசம், அசாம் உள்ளிட்ட சில மாநிலங்களில், 3 முதல் 4 சதவீதமாக உயர்த்தி உள்ளது.

பொன்னியின் செல்வனில் குந்தவையாக நடித்தது இந்த நடிகையின் மகளா? ஆச்சர்யத்தில் ரசிகர்கள்!

இதனை தொடர்ந்து, ஜூலை மாதம் நெருங்க இன்னும் ஒரு சில மாதங்களே உள்ளதால், அடுத்த அகவிலைப்படி உயர்வுவை எதிர்பார்த்து அரசு ஊழியர்கள் உள்ளனர். அவ்வாறு உயருமேயானால், கூடுதலாக 4 சதவீதம் அதிகரித்து, 42-லிருந்து 46 சதவீதமாக அகவிலைப்படி உயர கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அகவிலைப்படி உயர்வு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்ப்புகள் எழுந்து வருகின்றன. இதற்கிடையில், ஜனவரி மாதத்திற்கான அகவிலைப்படி இன்னும் பல மாநிலங்களில் உறுதி செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here