“ஜெயிலர்” படத்தின் ரிலீஸ் தேதி வெளியீடு – அதிகாரப்பூர்வ வீடியோவை வெளியிட்ட படக்குழுவினர்!!

0
"ஜெயிலர்" படத்தின் ரிலீஸ் தேதி வெளியீடு - அதிகாரப்பூர்வ வீடியோவை வெளியிட்ட படக்குழுவினர்!!

நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்து படக்குழுவினர் இணையதளம் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

ஜெயிலர் திரைப்படம்:

தென்னிந்திய தமிழ் சினிமாவில் 90ஸ் காலகட்டத்தில் இருந்து சூப்பர் ஸ்டாராக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் நடிகர் ரஜினிகாந்த். தற்போது இவர் நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதுபோக தமன்னா, ரம்யாகிருஷ்ணன், சிவராஜ்குமார், மோகன்லால், சுனில், ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

பான் இந்தியா முறையில் உருவாகும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தின் ஷூட்டிங் இறுதி கட்டத்தை நெருங்கிய நிலையில் அடுத்த கட்ட பணிகளில் படக்குழுவினர் தீவிரம் காட்டி வருகின்றனர். சமீபத்தில் ரஜினியின் முத்துவேல் பாண்டியன் கதாபத்திரத்தின் இன்ட்ரோ வீடியோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது.

TNPSC, SSC தேர்வுக்கு தயாராக்குறிங்களா?? தமிழக அரசின் சிறப்பு பயிற்சி முகாம்., முழு விபரம் உள்ளே!!!

இந்நிலையில் ஜெயிலர் படத்தை குறித்து முக்கியமான அப்டேட் ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். அதாவது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ஜெயிலர் திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இதை கேட்ட ரசிகர்கள் சந்தோஷத்தில் ஆர்ப்பரித்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Nelson Dilipkumar (@nelsondilipkumar)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here