லடாக் எல்லையில் இந்திய வீரர்கள் வீரமரணம் – பிரதமர் மோடி இரங்கல்..!

0
PM Modi Conference
PM Modi Conference

இந்தியா மற்றும் சீன ராணுவத்தினர் இடையே லடாக் எல்லையில் நடைபெற்ற மோதலில் உயிரிழந்த 3 இந்திய வீரர்களுக்கு பிரதமர் மோடி அவர்கள் இரங்கல் தெரிவித்து உள்ளார்.

எல்லைப் பிரச்சனை:

இந்தியா – சீனா நாடுகளுக்கு இடையே நடைபெறும் மோதலில் 125 ஆண்டுகளுக்குப் பிறகு உயிரிழப்புகள் நிகழ்ந்து உள்ளது. இது இருநாட்டு எல்லையில் அசாதாரண சூழ்நிலையை ஏற்படுத்தி உள்ளது. இரு நாட்டு படைகளும் லடாக் எல்லையில் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் பின்வாங்கும் பொழுது வன்முறை ஏற்பட்டு உள்ளது. இதில் கற்களைக் கொண்டு தாக்கியதில், இந்திய ராணுவ வீரர்கள் 3 பேர் (ஒரு அதிகாரி உட்பட) உயிரிழந்து உள்ளனர்.

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

India China
India China

இதில் தமிழகத்தின் ராமநாதபுரத்தைச் சேர்ந்த பழனி எனும் ராணுவ வீரர் ஒருவரும் அடங்குவார். இந்திய வீரர்கள் தாக்குதலில் 5 சீன வீரர்கள் பலியாகி உள்ளதாக அந்நாட்டு ஊடகம் செய்தி வெளியிட்டு உள்ளது.

வீடு தேடி வரும் ரூ.1000 நிவாரணம் – முதல்வர் அறிவிப்பு..!

PM Modi
PM Modi

இது குறித்து முப்படை தளபதிகளுடன் அவசர ஆலோசனையில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஈடுபட்டு இருந்தார். ஆலோசனைக்குப் பிறகு பிரதமர் மோடி அவர்களிடம் லடாக்கில் நடைபெற்ற தாக்குதல் குறித்து ராஜ்நாத் சிங் விளக்கம் அளித்தார். இந்நிலையில் தற்போது 21 மாநில முதல்வர்களுடன், பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கொரோனா பாதிப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தி வருகிறார். அதில் எல்லையில் இந்திய வீரர்கள் வீர மரணம் அடைந்ததற்கு மோடி இரங்கல் தெரிவித்து உள்ளார். வீரர்களின் குடும்பத்திற்கும் தனது இரங்கலை மோடி கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here