வீடு தேடி வரும் ரூ.1000 நிவாரணம் – முதல்வர் அறிவிப்பு..!

0
cmo of tamilnadu
cmo of tamilnadu

கொரோனா முழு ஊரடங்கால் அறிவிக்கப்பட்டு இருந்த 1000 ரூபாய் நிவாரணம் வரும் ஜூன் 22ம் தேதி அவரவர் வீடு தேடி சென்று வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் அறிவித்து உள்ளார்.

முழு ஊரடங்கு:

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் வரும் 19ம் தேதி முதல் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதனால் பல்வேறு கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டு உள்ளது. ஜூன் 30 வரை 12 நாட்களுக்கு இந்த முழு ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் ஜூன் 21, 28 ஆகிய இரு ஞாயிற்றுக்கிழமைகளில் எவ்வித தளர்வுகளும் இன்றி கடுமையான ஊரடங்கு அமலில் இருக்கும் என அரசு அறிவித்துள்ளது.

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

Lock down
Lock down

லடாக் எல்லையில் சீன ராணுவ தாக்குதலில் 3 இந்திய வீரர்கள் வீரமரணம் – ராஜ்நாத்சிங் அவசர ஆலோசனை..!

இதனால் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டு உள்ள பகுதிகளில் அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு தலா 1000 ரூபாய் நிவாரணமாக வழங்கப்படும் என முதல்வர் அறிவித்து இருந்தார். ரேஷன் கடைகள் செயல்படும் நேரமும் குறைக்கப்பட்டு உள்ளதால், வரும் ஜூன் 22ம் தேதி அவரவர் வீட்டிற்கே சென்று 1000 ரூபாய் நிவாரணத்தொகை வழங்கப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் அறிவித்து உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here