லடாக் எல்லையில் சீன ராணுவ தாக்குதலில் 3 இந்திய வீரர்கள் வீரமரணம் – ராஜ்நாத்சிங் அவசர ஆலோசனை..!

0
Ladakh Border
Ladakh Border

இந்தியா – சீனா நாடுகளின் லடாக் எல்லையின் கிழக்குப் பகுதியில் இரு நாட்டு வீரர்களும் இன்று மோதலில் ஈடுபட்டு உள்ளனர். இதில் 3 இந்திய வீரர்கள் உயிரிழந்து உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

எல்லைப் பிரச்சனை:

இந்தியா – சீனா நாடுகள் இடையே நீண்ட காலமாக லடாக் எல்லைப்பகுதியில் பிரச்சனை நிலவி வருகிறது. இந்த மாத தொடக்கத்தில் இது தீவிரமடைந்து இரு நாடுகளும் தனது ராணுவ படைகளை எல்லையில் குவிக்க தொடங்கின. இதனால் போர்பதற்றம் நிலவியதால் இரு நாட்டு ராணுவ உயர் அதிகாரிகளும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதன் மூலம் எல்லையில் அமைதியை கொண்டு வர முடிவு செய்யப்பட்டது. இதில் உறுதியான முடிவுகள் எதுவும் எடுக்கப்படாமல் இருந்தது.

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

India China Army Officers
India China Army Officers

இருப்பினும் முதற்கட்ட பேச்சுவார்த்தை முடிந்ததால் அமைதியை நிலைநாட்ட சீன ராணுவ படைகள் எல்லையில் இருந்து பின்வாங்கத் தொடங்கின. கல்வான் பள்ளத்தாக்கில் இரு நாட்டு படைகளும் பின்வாங்கும் பொழுது மோதல் ஏற்பட்டு உள்ளது. இதில் சீன ராணுவ தாக்குதலில் இந்திய ராணுவ வீரர்கள் 3 பேர் வீரமரணம் அடைந்து உள்ளனர். அதில் ஒருவர் அதிகாரி எனவும் இருவர் வீரர்கள் என கூறப்படுகிறது. தாக்குதலில் சீன ராணுவத்தைச் சேர்ந்த 5 வீரர்கள் உயிரிழந்தும், 10 வீரர்கள் காயமடைந்து உள்ளதாக அந்நாட்டு வெளியுறவுத்துறை செய்தி வெளியிட்டு உள்ளது.  இதனால் லடாக் எல்லையில் அசாதாரண சூழல் நிலவுகிறது.

10-வது முறையாக பெட்ரோல், டீசல் விலையேற்றம் – பிரதமருக்கு சோனியா காந்தி கடிதம்..!

Ladakh Border Issue
Ladakh Border Issue

இந்த தாக்குதல் தொடர்பாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ராணுவ உயர் அதிகாரிகளுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டு உள்ளார். இதில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கர் கலந்து கொண்டுள்ளார். கல்வான் பள்ளத்தாக்கில் இருந்து சீன நாட்டு படைகள் வெளியேறும் பொழுது வன்முறையில் ஈடுபட்டதாக இந்திய ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக இரு நாட்டு ராணுவ உயர் அதிகாரிகள் லடாக்கில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here