10-வது முறையாக பெட்ரோல், டீசல் விலையேற்றம் – பிரதமருக்கு சோனியா காந்தி கடிதம்..!

0
sonia-gandhi-praises-modi-for-lockdown-jpg
sonia-gandhi-praises-modi-for-lockdown

கொரோனா தற்போது நாடெங்கிலும் பரவி வரும் நிலையில் உலக நாடுகள் அனைத்தும் ஸ்தம்பித்து போய் உள்ளனர். மேலும் 10 வது நாளாக பெட்ரோல், டீசல் விலை உயர்வை திரும்பி பெற சோனியா காந்தி வலியுறுத்தியுள்ளார்.

பெட்ரோல்,டீசல் விலை

ஊரடங்கு உத்தரவு காரணமாக வாகன போக்குவரத்து முடங்கிது. அப்போது பெட்ரோல், டீசல் விற்பனை மிகவும் குறைந்ததால் எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் விலையை நிர்ணயிக்கவில்லை. ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வாகனங்கள் அதிக அளவில் இயங்க தொடங்கிய நிலையில், கடந்த 7ம் தேதி முதல் பெட்ரோல் டீசல் விலை தினந்தோறும் நிர்ணயம் செய்யப்படுகிறது. அன்றைய தினம் பெட்ரோல் 53 காசுகளும், டீசல் 52 காசுகளும் உயர்த்தப்பட்டது. அதன் பின்னர் தினந்தோறும் விலை உயர்த்தப்படுகிறது. அவ்வகையில் இன்று 10வது நாளாக பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

petrol and deasal
petrol and deasal

சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 41 பைசா உயர்ந்து 80 ரூபாய் 37 பைசாக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. டீசல் விலை லிட்டருக்கு 48 காசுகள் உயர்ந்து, 73 ரூபாய் 17 காசுகளுக்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 10 நாட்களில் மட்டும் பெட்ரோல் லிட்டருக்கு 4 ரூபாய் 83 பைசாவும், டீசல் 4 ரூபாய் 95 பைசாவும் உயர்ந்துள்ளன.

சோனியா காந்தி

கடந்த 2018 ஆம் ஆண்டு கச்சா எண்ணெய் விலை உச்சத்தில் இருந்தபோது விற்கப்பட்டதை தற்போது பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது. மேலும் பெட்ரோல், டீசல் அதிருப்தி அடைந்துள்ளனர். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஏறாத நிலையில் எண்ணெய் நிறுவனங்கள் விலையை தொடர்ந்து உயர்த்தி வருகின்றன. இதற்கு பல்வேறு தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

soniya gandhi
soniya gandhi

மேலும் இதனை தொடர்ந்து சோனியா காந்தி இந்த விலை ஏற்றத்தை குறித்து கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளார். மேலும் இது குறித்து பிரதமர் மோடிக்கு கடிதம் அனுப்பியுள்ளார். பெட்ரோல் – டீசல் விலை உயர்வு மக்களை மேலும் துயரத்தில் ஆழ்த்துவதுடன் கூடுதல் சுமையையும் ஏற்படுத்துகிறது. ஏற்கனவே கஷ்டத்தில் இருக்கும் மக்களை மேலும் கஷ்டங்களுக்கு ஆளாக்காமல் அவர்களின் துயரத்தை தணிப்பது அரசாங்கத்தின் கடமை என்றும் சோனியா காந்தி கூறி உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here