50% இட ஒதுக்கீட்டில் மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் – உச்சநீதி மன்றம் உத்தரவு..!

0
medical college
medical college

மருத்துவ படிப்பிற்காக 50 சதவீத ஒதுக்கீடு பற்றிய வழக்கில் உச்ச நீதி மன்றத்தில் இதனை பற்றி விளக்கம் அளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

50 சதவீத ஒதுக்கீடு

மருத்துவ மேற்படிப்பில் இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என திமுக, அதிமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் தொடர்ந்த வழக்கு இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. தமிழகத்தில் முதுநிலை மருத்துவ படிப்புகளின் கீழ் 1758 இடங்கள் உள்ளன. இதில், 50 சதவீதம் அகில இந்திய தொகுப்பாக மத்திய அரசு 879 இடங்களை பெறுகிறது.

மனு தாக்கல்

அதனால் இட ஒதுக்கீடு கொள்கையின்படி இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கான 27 சதவீத இடங்கள் மட்டுமல்ல ஒரு இடம் கூட வழங்கப்படவில்லை. இதேபோன்று இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களும் முதுநிலைப் படிப்பிற்காக அகில இந்திய தொகுப்புக்கு வழங்கப்படும் இடங்களில் ஒரு இடம் கூட இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு ஒதுக்கப்படவில்லை.

court order
court order

இதில் இதர பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என தமிழ்நாட்டில் திமுக, அதிமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் ஒரு அணியில் நின்று கோரிக்கை விடுத்துள்ளன. இது தொடர்பாக உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றத்தை நாடச் சொன்ன நிலையில், திராவிடர் கழகம், மதிமுக, திமுக, அதிமுக, பாமக மற்றும் தனி நபர்கள் சார்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

judmental
judmental

இந்த மனு மீதான விசாரணை உயர்நீதிபதிகள் சுப்பையா மற்றும் கிருஷ்ண சாமி ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது அதிமுக சார்பில் ஆஜரான வழக்கறிஞர் 50 சதவீத இட ஒதுக்கீடு அமல்படுத்தப்படும் வரை கலந்தாய்வுகள் நடத்தக்கூடாது என்று கூறினார். திமுக உள்ளிட்ட பிற கட்சி வழக்கறிஞர்களும் 50 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்த வலியுறுத்தினர். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை ஜுன் 22ஆம் தேதிக்கு தள்ளிவைத்ததுடன் இதுதொடர்பாக மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here