தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு.. புதிய திட்டங்களை வெளியிட்ட பள்ளிக்கல்வித்துறை.. முழு விவரம் உள்ளே!!

0
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு.. புதிய திட்டங்களை வெளியிட்ட பள்ளிக்கல்வித்துறை.. முழு விவரம் உள்ளே!!
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு.. புதிய திட்டங்களை வெளியிட்ட பள்ளிக்கல்வித்துறை.. முழு விவரம் உள்ளே!!
கோடை விடுமுறைக்கு பிறகு தமிழகம் முழுவதும் அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் என 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிகள் இன்று திறக்கப்பட்டுள்ளன. முதல் நாளான இன்றே, மாணவர்களுக்கு விலையில்லா பாடப் புத்தகம், சீருடை  உள்ளிட்ட அனைத்து விலையில்லா நலத்திட்டப் பொருட்களும் வழங்குவதற்கு ஏற்படுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில் 2024 -25 ஆம் கல்வி ஆண்டிற்கான புதிய திட்டங்களை  பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
  • நடப்பாண்டு 220 நாள்கள் பள்ளிகள் செயல்படும். மாணவர்கள் மத்தியில் வாசிப்புப் பழகத்தை அதிகரிக்க மதிய உணவு இடைவேளைக்கு பிறகு பிற்பகல் ஒரு மணி முதல் 1.20 மணி வரை நூல் வாசிப்பு நடத்தப்பட உள்ளது.

  • 4 மற்றும் 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வாரத்திற்கு 2 பாடவேளைகள் வாசிப்புக்கு ஒதுக்கப்படுகின்றன. 6 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இலக்கிய மன்றம், விநாடி வினா, சுற்றுச்சூழல் மன்றம், கலையும் கைவண்ணமும், இசை, வாய்ப்பாட்டு உள்ளிட்ட தனித்திறன்களை வளர்க்க பாட வேளைகள் ஒதுக்கப்பட உள்ளன.
  • ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு வரையில் ஆங்கிலப் பேச்சுப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளன.
காலாண்டுத் தேர்வு செப்டம்பர் 20 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரை நடத்தப்பட்டு விடுமுறை அக்டோபர் 2 ஆம் தேதிவரை வழங்கப்பட உள்ளது. அரையாண்டு தேர்வு டிசம்பர் 16 முதல் 23 ஆம் தேதி வரை நடத்தப்பட்டு அடுத்த ஆண்டு ஜனவரி 2 ஆம் தேதி வரை விடுப்பு வழங்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here