விஜய் பிறந்தநாள் விழாவில் தீ விபத்து.. வெளியான அதிர்ச்சி தகவல்!!

0

தமிழ் சினிமாவில் வசூல் மன்னன் என்ற அந்தஸதை பெற்று பல பிளாக்பஸ்டர் ஹிட்களை கொடுத்தவர் தான் தளபதி விஜய். இவரின் 50-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி கட்சி நிர்வாகிகள் பல்வேறு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துள்ளனர். இந்நிலையில், சென்னை நீலாங்கரையில் நடைபெற்ற பிறந்தநாள் நிகழ்ச்சியில் ஓர் அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.

அதாவது இந்த விழாவில் சாகசத்தில் ஈடுபட்ட சிறுவனுக்கு தீ விபத்து ஏற்பட்டது. சிறுவனின் கையில் தீ பற்ற வைத்த ஓடுகளை உடைக்க முற்பட்டபோது, அவர் கை முழுவதும் தீ பரவியது. அதனை அணைக்க முற்பட்டவரின் கையில் இருந்த பாட்டிலில் இருந்து சிந்திய பெட்ரோலால், மேலும் தீ பரவியது. தற்போது அந்த சிறுவன் முதலுதவி அளிக்கப்பட்டு நலமுடன் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

Enewz Tamil WhatsApp Channel 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here