பிரதமர் மோடிக்கு 70வது பிறந்தநாள் – நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து!!

0

பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் 70வது பிறந்தநாளை ஒட்டி நடிகர் ரஜினிகாந்த் ட்விட்டரில் தனது வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளார். இந்த சவாலான நேரங்களில் உறுதியமான மனிதரான உங்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் என ரஜினிகாந்த் பதிவிட்டு உள்ளார்.

ரஜினிகாந்த் வாழ்த்து:

‘நான் அரசியலுக்கு வருவது உறுதி, தேதி பின்னர் அறிவிக்கப்படும்’ என வருடா வருடம் வசனங்கள் மாறுகிறதே தவிர ரஜினி கட்சி தொடங்கிய பாடில்லை. இதனால் அவரது ரசிகர்களும் கவலையில் உள்ளனர். இந்நிலையில் சோர்ந்திருந்த ரசிகர்களை உற்சாகப்படுத்தும் விதமாக நவம்பர் மாதம் ரஜினிகாந்த் கட்சி பெயரினை வெளியிட்டு, முழுநேர அரசியல்வாதியாக மாற உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

rajnikanth

இதனால் சந்தோஷமடைந்த ரசிகர்கள் ‘ இப்ப இல்லனா, எப்பவும் இல்ல’ என விதவிதமான வசனங்களுடன் போஸ்டர் அடிக்கத் தொடங்கினர். தீடிரென இவ்வாறு நோட்டீஸ் ஓட்டக்கூடாது என ரஜினி மக்கள்மன்ற தலைமையிடம் இருந்து உத்தரவு வெளியானது. ஆனால் அதனையும் ஒரு கான்செப்ட் ஆக்கி போஸ்டர் ஒட்டினர் ரசிகர்கள். ரஜினி சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டால் ஓட்டு வித்தியாசத்தில் மாற்றம் நிகழும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

பிரதமர் மோடி பிறந்தநாள்:

இன்று நம் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு 70வது பிறந்தநாள். இந்த நாளை தமிழக பாஜக.,வினர் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். 70 கிலோ லட்டு, இலவச மீன், விருந்து, ஆட்டம், பாட்டம் என அமர்களப்படுத்தினர். பிரதமர் மோடி அவர்களுக்கு பிற நாட்டு தலைவர்கள், மத்திய அமைச்சர்கள், மாநில முதல்வர்கள் என பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளனர்.

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் ட்விட்டரில் தனது வாழ்த்துக்களை பதிவிட்டு உள்ளார். அதில் ‘இந்த சவாலான நேரங்களில் உறுதியமான மனிதரான உங்களுக்கு மேலும் உறுதி கிடைக்க இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்’ என பதிவிட்டு உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here