Monday, May 13, 2024

உங்கள் ஊரில் இருந்து போதை பொருள் தடுப்பு பிரச்சாரத்தை ஆரம்பியுங்கள் – கங்கனா மீது ஊர்மிளா பாய்ச்சல்!!

Must Read

பாலிவுட்டில் போதைப் பொருட்கள் பயன்படுத்தப்படுவதாக கடந்த சில நாட்களாக நடிகை கங்கனா ரணாவத் விமர்சித்து வந்த நிலையில், அவருக்கு பதிலடி கொடுக்கும் விதமாக நடிகை ஊர்மிளா “போதை பொருள் பயன்பாட்டிற்கு எதிரான பிரச்சாரத்தை நடிகை கங்கனா தனது சொந்த மண்ணில் இருந்தே ஆரம்பிக்கலாம்” என்று கூறியுள்ளார்.

நடிகர் மரணம்:

கடந்த சில மாதங்களுக்கு முன் பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் தற்கொலை செய்து கொண்டார். இது திரையுலகில் இருந்த அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அதேபோல் அவர் தானாக தற்கொலை செய்து கொள்ளவில்லை என்றும் அவரை கொலை செய்துள்ளனர் என்றும் பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் சர்ச்சையை கிளப்பினார். இதனால் நடிகர் தற்கொலை செய்து கொண்ட வழக்கை சிபிஐ அதிகாரிகள் விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

ENEWZ வலைதள பக்கங்களுக்கு கிளிக் செய்யவும்

அனைவரும் கோரிக்கை வைத்ததால் அவரது வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாறியது. அதில் அதிர்ச்சி அளிக்கும் தகவல் வெளியானது. சுஷாந்த் காதலி நடிகை ரியா சுஷாந்த் உண்ணும் உணவில் தான் போதை மருந்து கலந்து கொடுத்ததாக ஒப்புக் கொண்டார். இதனால் பல பிரபலங்கள் போதை பொருள் கடத்தலுக்கு துணை போய் உள்ளனர் என்ற செய்தி வெளிச்சத்திற்கு வந்தது.

கங்கனா ஆவேசம்:

இதனை தொடர்ந்து நடிகை கங்கனா கூறுகையில் “பாலிவுட்டில் போதை பொருளை அதிகமாக பயன்படுத்துகின்றனர். கொக்கைன் போன்ற போதை பொருட்களையும் பயன்படுத்துகின்றனர். இந்த விவகாரம் எல்லாம் சுஷாந்திற்கு தெரியும், அதனால் தான் அவரை கொலை செய்து விட்டனர். அதே போல் பார்ட்டிகளில் போதை பொருட்களை சர்வ சாதாரணமாக பயன்படுத்துவர்.”

சிலர் தங்களது வீட்டிற்கு வருபவர்களுக்கு கூட தண்ணீரில் கலந்து இந்த போதை பொருட்களை தருவர். இது குடிப்பவர்களுக்கு தெரியாது. பாலிவுட் போதை பொருள் பயன்படுத்தும் சாக்கடையாக உள்ளது. அதனை பிரதமர் மோடி சுத்தப்படுத்துவார் என்று நம்புகிறேன்” என்று கூறிருந்தார்.

ஊர்மிளா பதிலடி:

இவர் இவ்வாறு பகீர் தகவலை அளித்தது அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்தது. ஆனால், இதற்கு ரங்கீலா படத்தின் நாயகி ஊர்மிளா கடுமையாக தனது கருத்தை பதிவு செய்துள்ளார். அவர் கூறியதாவது “கங்கனா போதை பொருள் தடுப்பு பிரச்சாரத்தை தனது சொந்த மாநிலமான ஹிமாச்சல் பிரதேசத்தில் இருந்து ஆரம்பிக்கலாம். போதை பொருள் பயன்பாடு பாலிவுட்டில் மட்டும் இல்லை அது இந்தியாவில் பரவலாக எல்லா மாநிலங்களிலும் உள்ளது.”

இந்த முறை பர்பிள் கேப் வெல்லப்போகும் வீரர் யார்?? ஐபிஎல் 2020 அப்டேட்ஸ்!!

“சொல்லப்போனால், ஹிமாச்சல் மாநிலத்தில் போதை பொருள் தயாரிப்பதில்லையா?? அவர் மும்பை நகரத்தை சொல்வது அங்குள்ள மக்களையும் சேர்த்து அவமதிப்பதாக கருதப்படுகிறது. மும்பை நகரவாசியான என்னால் அதனை பொறுத்து கொள்ள முடியாது. ஒருவர் கத்திக்கொண்டு ஒரு கருத்தை சொன்னால் அது எல்லாமும் உண்மை என்று ஆகாது” என்று கூறி கங்கனாவிற்கு பதிலடி கொடுத்துள்ளார்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

நடிகர் சூர்யா-வும் அரசியலில் களமிறங்க உள்ளாரா? சைலண்ட்டாக நடந்த கூட்டம்? வெளியான முக்கிய தகவல்!!!

தமிழ் சினிமாவின் பிரபல நடிகரான விஜய் 'தமிழக வெற்றிக் கழகம் (TVK)' எனும் கட்சியை, சமீபத்தில் தொடங்கி உள்ளார். இதைத்தொடர்ந்து வரும் 2026 ஆம் ஆண்டு...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -