சூப்பரான ‘ட்ராகன் சிக்கன் ரெசிபி’ – வீட்டுல செஞ்சு அசத்துங்க!!

0
dragon-chicken-recipe
dragon-chicken-recipe

சிக்கனில் பல வகையான ரெசிபிக்களை எளிதாக செய்து முடிக்கலாம். ஏனெனில் சிக்கன் சீக்கிரம் வேக கூடிய ஒரு உணவு ஆகும். மேலும் சிக்கன் என்றால் விரும்பி சாப்பிடுபவர்கள் ஏராளம். அந்த வகையில் தற்போது சூப்பரான ட்ராகன் சிக்கன் எப்படி செய்வது என பார்க்கலாம் வாங்க.

தேவையான பொருட்கள்

chicken
chicken
  • சிக்கன் – 1/2 கி
  • முட்டை – 1
  • சோளமாவு – 1 தேக்கரண்டி
  • சோயா சாஸ் – 2 தேக்கரண்டி
  • தக்காளி சாஸ் – 2 தேக்கரண்டி
  • மிளகுத்தூள் – 1 தேக்கரண்டி
  • மிளகாய்த்தூள் – 1 தேக்கரண்டி
  • குடைமிளகாய் – 2
  • முந்திரி – 10 கிராம்
  • இஞ்சி – சிறிது
  • பூண்டு – 3 பல்
  • வெங்காயம் – 2

செய்முறை

முதலில் வெங்காயம், குடைமிளகாய், இஞ்சி, பூண்டு போன்றவற்றை பொடிப் பொடியாக நறுக்கி எடுத்துக் கொள்ளவும். அதன்பின் ஒரு பௌலில் சிக்கனை சேர்த்து அதில் மிளகுத்தூள், சோயா சாஸ், முட்டை, சோளமாவு சேர்த்து கலந்து 15 நிமிடங்கள் ஊற வைத்துக் கொள்ளவும்.

chicken
chicken

அதன்பின் அதனை எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்துக் கொள்ளவும். பின்பு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் முந்திரி, இஞ்சி, பூண்டு சேர்த்து வதங்கியதும் அதில் வெங்காயம் மற்றும் குடைமிளகாயை சேர்க்கவும்.

chicken
chicken

இப்பொழுது மிளகாய்த்தூள், உப்பு மற்றும் தக்காளி சாஸ் சேர்த்து நன்கு வதக்கவும். வதங்கியதும் பொரித்து வைத்த சிக்கனை அதில் சேர்த்து கிளறவும். 5 நிமிடங்கள் கழித்து கொத்தமல்லி தூவி இறக்கினால் சுவையான ‘ட்ராகன் சிக்கன்’ தயார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here