தமிழக ஆளுநர் முடிவு எடுக்க கால அவகாசம் – பேரறிவாளன் விடுதலை வழக்கு!!

0

ராஜீவ் காந்தி கொலைவழக்கில் கைதான பேரறிவாளன் உட்பட 7 பேரை விடுதலை செய்வதற்குரிய முடிவு எடுக்க ஒரு வாரம் அவகாசம் வழங்கி தமிழக ஆளுநருக்கு முழு அதிகாரம் கொடுத்துள்ளது உச்சநீதிமன்றம்.

தமிழக ஆளுநருக்கு அவகாசம்

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலைவழக்கில் கைதான பேரறிவாளன், நளினி, முருகன், சாந்தன், ராபர்ட், ஜெயக்குமார், ரவிசந்திரன் ஆகியோர் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கொலை வழக்கில் கைதான இவர்களுக்கு மனு அடிப்படையில் விடுதலை அளிக்கவேண்டும் என பேரறிவாளன் நீதிமன்றத்தில் மனு ஒன்றை சமர்பித்திருந்தார். இந்த வழக்கு கடந்த 2018 ம் ஆண்டு விசாரணைக்கு வந்தபோது இவர்களை விடுவிக்கும் உரிமை அம்மாநில அரசுக்கு வழங்கப்படுகிறது என உச்சநீதிமன்றம் பதிலளித்திருந்தது.

பாண்டியன் ஸ்டோர்ஸில் மீண்டும் ஒரு புதுவரவு – ஆர்வத்தில் ரசிகர்கள்!!

இதை தொடர்ந்து மத்திய அரசிடமிருந்து வந்த எதிர்ப்பினால் மாநில அரசு எத்தகைய தீர்மானத்தையும் எடுக்காமல் இருந்தது. மீண்டுமாக இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது இந்த வழக்கு சம்பந்தமாக இறுதி முடிவு எடுப்பதற்கு எந்த மாநிலத்திற்கோ நீதிமன்றத்துக்கோ அதிகாரம் இல்லை எனவும் இந்த வழக்கு தொடர்பான முடிவு எடுக்க குடியரசு தலைவருக்கு அதிகாரம் கொடுக்கப்பட வேண்டும் என மத்திய அரசு சார்பாக கருத்துகள் முன் வைக்கப்பட்டது.

இந்த வழக்கானது நாகேஸ்வரராவ், இந்து மல்கோத்ரா, அப்துல் நசீர் ஆகிய இரண்டாவது உச்சநீதிமன்ற நீதிபதிகள் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசின் சார்பில் கூடுதல் சொலிசிட்டர் துஷார் மேத்தா தாமாக முன்வந்து பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலையாக்குவதை குறித்து அம்மாநில ஆளுநர் முடிவு எடுக்கும்படி உத்தரவு கேட்டுக்கொள்ளப்பட்டது. மேலும் ஆளுநர் அவர்கள் அடுத்த மூன்று அல்லது 4 நாட்களுக்குள் முடிவு எடுக்கும்படி அவகாசம் கொடுக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டது.

இதை தொடர்ந்து இந்த வழக்கை நான்கு வாரங்களுக்கு ஒத்தி வைக்க உத்தரவிட்டனர் நீதிபதிகள். மேலும் பேரறிவாளன் தரப்பிலிருந்து விடுதலை தொடர்பான குழப்பங்களுக்கு தீர்வு கேட்டபோது பேரறிவாளன் விடுதலை தொடர்பான வழக்குக்கு தமிழக ஆளுநர் முடிவு எடுக்க அவருக்கு ஒரு கால அவகாசம் வழங்கி உத்தரவிட்டது நீதிமன்றம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here