அசுரன் என்று பயோவை மாற்றிய தனுஷ் – ரசிகர்கள் ஆச்சர்யம்!!

0

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தனுஷ் அசுரன் படத்தில் தனது முழு திறமையையும் வெளிப்படுத்தி அனைவரையும் கவரும் வண்ணத்தில் மிக அருமையாக நடித்திருந்தார். தற்போது இவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தனது பாயோவை அசுரன் ஆக்டர் என்று மாற்றியுள்ளார்.

அசுரன்:

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகள்பவர் தான் தனுஷ். இவர் தமிழ் சினிமா மட்டுமல்லாமல் ஹாலிவுட் படங்களில் நடிக்கும் அளவிற்கு சினிமாவில் உச்சத்தை தொட்டுள்ளார். இவரது படங்கள் அனைத்தும் ரசிகர்களை ஈர்க்கும் வண்ணமாகவே இருக்கும். மேலும் இவரது நடிப்பு பற்றி சொல்லவே வேண்டாம் அந்த அளவிற்கு அனைவரையும் பிரமிக்க வைக்கும் அளவிற்கு நடிப்பில் அசத்துவார். கடந்த 2019ம் ஆண்டில் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், மஞ்சு வாரியர்ஸ், கென் கருணாஸ், டிஜே அருணாச்சலம் மற்றும் பசுபதி என பெரிய பட்டாளமே நடித்துள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அந்த படத்தில் இவர்கள் அனைவரின் நடிப்பும் தற்போது வரை பேசப்படுகிறது. குறிப்பாக தனுஷ் நடித்த சிவசாமி கதாபாத்திரம் தனுஷ் ரசிகர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பினரையும் கவர்ந்தது. மேலும் இந்த படம் பல விருதுகளை அள்ளியுள்ளது. அதுமட்டுமல்லாமல் கோவா சர்வதேச திரைப்பட விழாவில் இந்த படத்தை திரையிட தேர்வு செய்துள்ளனர். இதுபோல் பல சாதனைகளை படைத்துள்ளது. மேலும் இந்த படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது.

குடியரசு தின விழா – கலை நிகழ்ச்சிகள் ரத்து!!

பாயோவை மாற்றிய தனுஷ்:

அதில் கதையாகனாக நடிகர் வெங்கடேஷ் நடித்து வருகிறார். மேலும் அந்த படத்திற்கு நரப்பா என்று பெயரிட்டுள்ளனர். தற்போது நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் ஓர் செயலை செய்துள்ளார். தற்போது அந்த தகவல் வைரலாகி வருகிறது. அது என்னவென்றால் இதற்கு முன்பு வரை அவரது ட்விட்டர் பாயோவில் Actor என்ற இருந்த நிலையில் தற்போது ASURAN/Actor என்று பெருமையாக மாற்றியமைத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here