மாஸ்டர் திரைப்படத்தின் வசூல் இவ்வளவா?? மிரண்டு போகும் கோலிவுட்!!

0

கடந்த பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளிவந்த மாஸ்டர் திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. மேலும் படம் ரிலீசான வெறும் 8 நாட்களில் மாஸ்டர் திரைப்படம் வசூல் சாதனையை படைத்துள்ளது.

மாஸ்டர்:

தளபதி விஜய், மக்கள்செல்வன் விஜய் சேதுபதி, மாளவிகா மோகன் என்ற பெரிய பட்டாளமே நடித்துள்ள பஃடம் தான் மாஸ்டர் திரைப்படம். இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டே முடிந்து திரையரங்கில் வெளியாக தயார் நிலையில் இருந்தது. ஆனால் கொரோனா பரவல் காரணமாக இந்த படம் வெளியாவதில் தாமதமானது. திரையரங்குகள் திறப்பிற்காக காத்துக்கொண்டிருந்த படக்குழுவினர் கடந்த வாரம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த 13ம் தேதி அன்று திரையரங்கில் வெளியிட்டனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

பொதுவாகவே தளபதி படம் என்றாலே அதற்கென தனி ரசிகர்கள்பட்டாளமே இருக்கிறார்கள். மேலும் தளபதி நடித்துள்ள படங்கள் அனைத்தும் வெளியானதும் வசூல் வேட்டையை நடத்தி வரும் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. தற்போது மாஸ்டர் திரைப்படமும் வசூலில் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளது. மாஸ்டர் திரைப்படம் வெளியா 8 நாளில் சுமார் 200 கோடி வசூலாகியுள்ளது. இது ஒன்றும் தளபதிக்கு புதிதல்ல ஏற்கனவே அவர் நடித்த மெர்சல், சர்க்கார், பிகில் ஆகிய 3 திரைப்படமும் 200 கோடி வசூலை அள்ளியுள்ளது.

தமிழக ஆளுநர் முடிவு எடுக்க கால அவகாசம் – பேரறிவாளன் விடுதலை வழக்கு!!

வசூல் மன்னன்:

தற்போது அந்த வரிசையில் தொடர்ச்சியாக தளபதி 4 வது முறையாக 200 கோடி வசூலை அள்ளியுள்ளார். தமிழகத்தில் மட்டும் சுமார் 100 கோடி வரை மாஸ்டர் திரைப்படம் வசூலை அள்ளியுள்ளதாம். குறிப்பாக உலகில் எந்த திரையரங்குகளிலும் 100 சதவீத பார்வையாளர்களை அனுமதிக்கவில்லை. இந்நிலையில் கூட மாஸ்டர் திரைப்படம் 200 கோடி வசூலை அள்ளியது பிரமிப்பான விஷயம் தான். இந்த திரைப்படம் விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்துள்ளது. இதன் மூலம் விஜய் வசூல் மன்னன் என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்துள்ளார். இந்த வசூலை குறித்து சினிமா வட்டாரங்கள் திகைத்து போய் உள்ளார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here