ஒலிம்பிக்ஸ் போட்டிகள் 2021 நடப்பது உறுதி – குழு தலைவர் தாமஸ் பாக்!!

0

நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் ஒலிம்பிக்ஸ் போட்டி இந்த ஆண்டு திட்டமிட்டபடி கண்டிப்பாக நடத்தப்படும் என ஒலிம்பிக்ஸ் குழுவின் தலைவர் தாமஸ் பாக் கூறியுள்ளார்.

ஒலிம்பிக்ஸ் நடக்கும் என உறுதி

விளையாட்டு உலகத்தின் மிகப்பெரிய போட்டியாக உலக நாடுகள் அனைத்திற்கும் இடையே நடத்தப்படும் போட்டி ஒலிம்பிக்ஸ் ஆகும். நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் இப்போட்டி தற்போது இந்த வருடமும் கண்டிப்பாக நடத்தப்படவுள்ளதாக ஒலிம்பிக்ஸ் குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார். கடந்த 2016 ம் ஆண்டு இப்போட்டி ரியோ டி ஜெனிரோவில் நடத்தப்பட்டது. 2020 ம் ஆண்டு டோக்கியோவில் இந்த போட்டிகள் நடத்தப்பட இருந்தது.

தமிழக ஆளுநர் முடிவு எடுக்க கால அவகாசம் – பேரறிவாளன் விடுதலை வழக்கு!!

2020 ஜுலை 24 முதல் ஆகஸ்ட் 9 ம் தேதி வரை இந்த போட்டிகள் நடைபெற இருந்தது. கொரோனா பரவல் காரணமாக இந்த போட்டிகள் நிறுத்தி வைக்கப்பட்டது. தற்போது இந்த ஆண்டு மீண்டுமாக இந்த போட்டிகளை ஜூலை 23 முதல் ஆகஸ்ட் 8 வரை நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பாராலிம்பிக்ஸ் போட்டிகள் ஜூலை 24 முதல் செப்டம்பர் 5 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஒலிம்பிக்ஸ் போட்டியின் குழு தலைவர் கூறுகையில், ‘திட்டமிட்டபடி இந்த ஆண்டிற்கான ஒலிம்பிக்ஸ் போட்டி ஜூலை 23 அன்று துவங்கும். இந்த விளையாட்டு போட்டியை பாதுகாப்பாகவும் வெற்றிகரமாகவும் நடத்துவதில் கருத்துடனும் உறுதியாகவும் உள்ளோம்’ என தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here