ரெஸ்டாரண்ட் ஸ்டைல் “பன்னீர் மசாலா தோசை” ரெஸிபி- குட்டீஸ் ஸ்பெஷல்!!!

0

தினமும் குழந்தைகளை சாப்பிட வைக்கிறது தாங்க இருக்குறதுலயே கஷ்டமான வேலை. அவுங்களுக்கு தினமும் எதாவது வெரைட்டியா சமைச்சு குடுத்தா தான் சாப்பிடுவேன்னு அடம் பிடிப்பாங்க. அப்டி உங்க குழந்தைகள் கேக்கும் போது இந்த ரெஸ்டாரண்ட் ஸ்டைல் “பன்னீர் மசாலா தோசை” செஞ்சு குடுங்க, சத்தமே இல்லாமல் ரொம்ப ஆசையா சாப்பிடுவாங்க. பன்னீர் மசாலா தோசை எப்படி செய்யலாம்னு பாக்கலாம் வாங்க.

தேவையான பொருட்கள்:

  • பன்னீர் – 2 கப்
  • குடை மிளகாய் – 1
  • வெங்காயம் – 1
  • தக்காளி – 1
  • பச்சை மிளகாய் – 1
  • மஞ்சள்தூள் – 1/2 டீ ஸ்பூன்
  • சீரகத்தூள் – 1 டீ ஸ்பூன்
  • மிளகாய் தூள் – 1 டீ ஸ்பூன்
  • கரம் மசாலா – 1 டீ ஸ்பூன்
  • பட்டர் – 1 டேபிள் ஸ்பூன்
  • மல்லித்தழை,புதினா – சிறிதளவு
  • உப்பு – தேவையான அளவு
  • நெய் – தேவையான அளவு
  • தோசைமாவு – தேவையான அளவு

செய்முறை:

பன்னீர் மசாலா தோசை செய்வதற்கு முதலில் பன்னீர் மசாலாவை ரெடி பண்ண வேண்டும். அதற்கு முதலில் ஒரு கடாயில், பட்டர் சேர்த்து அதில் வெங்காயம், பச்சை மிளகாய், குடை மிளகாய் சேர்த்து நன்கு சாஃப்ட் ஆகும் வரை வதக்க வேண்டும். பிறகு, அதில் தக்காளி சேர்த்து வதங்கியதும் மஞ்சள் தூள், சீரகத்தூள், மிளகாய் தூள். கரம் மசாலா வதக்கி கொள்ள வேண்டும். இப்பொழுது அதில், துருவிய பன்னீரை சேர்த்து கொள்ளலாம்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தேவையான அளவு உப்பு மற்றும் மல்லித்தழை, புதினா சேர்த்து வதக்க வேண்டும். இப்பொழுது பன்னீர் மசாலா ரெடியாகி விட்டது. இதை தனியே வைத்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது தோசை கல்லை அடுப்பில் வைத்து காய விட வேண்டும். கல்லின் மீது தண்ணீர் தெளிக்கும் போது நன்கு சத்தம் வந்தால் கல்லானது சரியான சூட்டில் உள்ளதாக அர்த்தம்.

காரசாரமான “செட்டிநாடு மட்டன் குழம்பு” ரெஸிபி!!

இப்பொழுது தோசை மாவை எடுத்து தோசை போல் ஊற்றி அதன் மேல் நெய் சேர்த்து நன்கு மொறு மொறுப்பாகும் வரை வேக விட வேண்டும். இப்பொழுது தோசையின் மேல் பன்னீர் மசாலாவை சேர்க்க வேண்டும். அதன் மேல் சிறிது பட்டர் வைத்துக் கொள்ளலாம். தோசை வெந்ததும் இரண்டாக மடித்து தட்டில் மாற்ற வேண்டும். இதனுடன் தேங்காய் சட்னி சேர்த்து பரிமாறினால் நன்றாக இருக்கும்.

சூடான பன்னீர் மசாலா தோசை ரெடி!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here