காரசாரமான “செட்டிநாடு மட்டன் குழம்பு” ரெஸிபி – விருந்தினர் ஸ்பெஷல்!!!!

0

உங்க வீட்ல உங்க நண்பர்களுக்கோ, இல்ல உறவினர்களுக்கோ விருந்து கொடுக்கும் போது ஏதாவது ஸ்பெஷல் டிஷ் செஞ்சு அவங்கள அசத்தணும்னு ஆசை படுறீங்களா. ரொம்ப கஷ்டப்படாம இந்த டிஷ் செஞ்சு அசத்தலாம் வாங்க. விருந்தினர்களுக்கு மட்டும் இல்லங்க நமக்கே திடீர்னு காரசாரமான குழம்பு சாப்பிடணும்னு ஆசை வந்துடுச்சுனாலும் இந்த குழம்பு வைச்சு சாப்பிட்டு பாருங்க. அன்னைக்கு வைக்குற சாப்பாடு எவ்ளோ சீக்கிரமா காலியாகுதுனு. “காரசாரமான செட்டிநாடு மட்டன் குழம்பு” எப்படி செய்யலாம்னு பாக்கலாம் வாங்க.

தேவையான பொருட்கள்:

மட்டன் – 500 gm
சின்ன வெங்காயம் – 100 gm
எண்ணெய் – 4 டேபிள் ஸ்பூன்
தக்காளி – 3
பச்சை மிளகாய் – 3
கறிவேப்பில்லை – சிறிதளவு
மஞ்சள் தூள் – 2 டீ ஸ்பூன்
இஞ்சி,பூண்டு விழுது – 2 டேபிள் ஸ்பூன்
மல்லித்தழை – ஒரு கை அளவு
தண்ணீர் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
பட்டை – 1 துண்டு
கிராம்பு – 4
ஏலக்காய் – 3
சோம்பு – 1 டீ ஸ்பூன்

செட்டிநாடு மசாலா அரைப்பதற்கு:

காய்ந்த மிளகாய் – 7
தனியா – 4 டேபிள் ஸ்பூன்
பட்டை – 1 துண்டு
சோம்பு – 1 டீ ஸ்பூன்
மிளகு – 1 டேபிள் ஸ்பூன்
சீரகம் – 1 டேபிள் ஸ்பூன்
ஏலக்காய் – 5
அன்னாச்சி பூ – 1

தேங்காய் மசாலா அரைப்பதற்கு:

தேங்காய் – 1 கப்
சோம்பு – 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

முதலில் தேங்காய் மற்றும் சோம்பு இரண்டையும் மிக்சி ஜாரில் சேர்த்து நன்கு நைசாக அரைத்துக் கொள்ள வேண்டும். இதை தனியே வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு ஒரு கடாயில், காய்ந்த மிளகாய், தனியா, பட்டை, ஏலக்காய் , மிளகு, சீரகம்,அன்னாச்சி பூ, சோம்பு இவற்றை நன்கு வறுத்துக் கொள்ள வேண்டும். அது ஆறிய பின்பு, நன்கு அரைத்து பொடியாக வைத்து கொள்ள வேண்டும்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இப்பொழுது ஒரு குக்கரில்,எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் பட்டை, கிராம்பு, சோம்பு, ஏலக்காய் சேர்த்து தாளிக்க வேண்டும். அதில், வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், இஞ்சி,பூண்டு பேஸ்ட், கறிவேப்பிலை சேர்த்து பச்சை வாடை போகும் வரை வதக்க வேண்டும். இதில் தேவையான அளவு மஞ்சள்தூள் மற்றும் உப்பு சேர்த்து கொள்ளலாம். தக்காளி நன்கு மசிந்து வந்ததும் அதில் அரைத்து வைத்திருக்கும் மசாலாவை சேர்க்க வேண்டும். மசாலாவை எண்ணையில் நன்கு வேக விட வேண்டும்.

பாரதிக்கு திருமணம் செய்ய ஏற்பாடு செய்யும் வேணு!!

இப்பொழுது இதில், மட்டன் துண்டுகளை சேர்த்து நன்கு மசாலா எல்லா பக்கமும் சேரும் வரை கலந்து விட வேண்டும். பிறகு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி 7 விசில் வரும் வரை விட வேண்டும். விசில் போன பின்பு 10 நிமிடங்கள் கழித்து திறந்து அதில், அரைத்து வைத்திருக்கும் தேங்காய் கலவையை சேர்த்து 15 நிமிடங்கள் சிம்மில் வைத்து கொதிக்க விட வேண்டும். எண்ணெய் தனியே பிரிந்து வந்ததும் மேலே மல்லித்தழை மற்றும் கறிவேப்பிலை சேர்த்து இறக்கி விட வேண்டும். இப்பொழுது காரசாரமான செட்டிநாடு மட்டன் குழம்பு ரெடி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here